அடிக்குற வெயிலில் வீட்டு தோட்டத்தை எப்படி பாதுகாப்பது..! – இதோ ஐடியா..!

பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதத்தை எட்டுவதற்குள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளை வெய்யிலிருந்து பாதுகாத்து எப்படி நம்மால் வீட்டுத் தோட்டம் பராமரிக்க முடியும் என்பதை பற்றி சில குறிப்புகளை இந்த கட்டுரை மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அனைவருக்குமே ஈஸியான வழி சூட்டை குறைக்க தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதுதான். ஆனால் அது எந்த சமயத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் தான் செடிகளை நாம் காப்பாற்ற முடியும்.இதை தவிர்க்க செடிகளுக்கு நீர் ஊற்றுகிறேன் என்று மதிய நேரத்தில் நீங்கள் நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.

சரி பின்பு எப்போதுதான் நீரூற்ற வேண்டும் என்று நீங்கள் மனதுக்குள் யோசிப்பது நன்றாக தெரிகிறது. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் மட்டும்தான் நீங்கள் செடிக்கு நீரை ஊற்ற வேண்டும் அதுதான் மிகச் சரியான வழிமுறையாகும்.

 வீட்டில் காய்கறிகளை நறுக்கும்போது வெளியே வீசக்கூடிய தோல் கழிவுகளை சிறிது சிறிதாக வெட்டி வேர் பகுதியில் அப்படியே போடுவதின் மூலம் வெப்பமானது வேர்ப்பகுதிகளை தாக்காமல் இருக்கும்.

மேலும் வெயில் காலத்தில் வெயிலை தாங்க கூடிய செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் அவசியம் வளர்ப்பது நல்லது. மேலும் அதற்கு போதுமான அளவு தண்ணீரும் உரமும் அளித்தால் வெயில் காலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய காய்கறிகளை அது அதிக அளவு கொடுக்கும்.

குறிப்பாக மிளகாய், வெள்ளரி, தர்பூசணி, கத்தரி போன்ற செடிகள் நன்கு செழித்து வளரும் பூ வகைகளை பொறுத்தவரை தொட்டியில் பூக்கக்கூடிய ரோஜாப்பூ, பேப்பர் பூ, சாமந்திப்பூ ஆகியவை கோடை காலத்தில் செழிப்பாக வளர்ந்து பூக்களைத் தரும்.

வெயில் காலங்களில் கொடியில் படரக்கூடிய தாவரங்களை  வளர்த்துவதன்  மூலம் அதிக வெப்பம் வீட்டுக்குள் வராமல் இருக்கும். எனவே வீட்டுக்கு முன் பகுதியில் அல்லது மாடியிலோ கொடி தாவரங்களை படர விட்டு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …