இன்று பெரும்பாலானவர்களின் வீட்டில் எண்ணற்ற மின்சாதன பொருட்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக இன்வெர்ட்டர் என்ற ஒன்றை நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.
கரண்ட் இல்லாத சமயத்தில் கரண்டை சேமித்து வைத்திருக்கும் எந்த இன்வெர்ட்டரை எப்படியெல்லாம் நாம் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
👍மின்தடை இல்லாத காலங்களில் வாரத்திற்கு ஒரு நாளில் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ நமது வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு இன்வெர்ட்டர் பேட்டரியை இயங்க வைக்க வேண்டும்.அப்போதுதான் பேட்டரி ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் நமக்கு பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும்.
👍 இன்வெர்ட்டர் பேட்டரியை நீங்கள் காற்றோட்டமான பகுதிகளில் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் இந்த பேட்டரி வெப்பம் ஆனால் அது சில சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே வெப்பமாக இருக்கக்கூடிய பகுதியில் இன்வெர்ட்டர் பேட்டரியை வைக்கக் கூடாது.
👍அதுபோலவே எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் அருகில் இன்வெர்ட்டர் பேட்டரி நீங்கள் வைக்க வேண்டாம். மேலும் இன்வெர்ட்டர் பேட்டரி டெர்மினல்களை அடிக்கடி நீங்கள் சுத்தம் செய்வது அவசியம். மேலும் இதில் தூசி படிவதற்கு நீங்கள் விட வேண்டாம்.
👍 45 நாட்களுக்கு ஒரு முறை இன்வெர்ட்டர் பேட்டரியின் நீர்மட்டத்தை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.நீர்மட்டம் குறைந்து இருந்தால் அதற்கு ஏற்ப நீங்கள் அந்த ஆர்ஓ நீரினை ஊற்றி அதை சரி செய்ய வேண்டும்.
👍இன்வெர்ட்டர் பேட்டரியின் மேல் பகுதியை சுத்தம் செய்ய உலர்ந்த காட்டன் துணியை பயன்படுத்தினால் போதுமானது ஈரமான துணிகளை கொண்டு இதை துடைக்க கூடாது.
மேற்கூறிய டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் நீண்ட நாட்கள் ஆனாலும் உங்களுக்கு இந்த இன்வெர்ட்டர் பேட்டரி பயனை கொடுக்கும்.