இப்படி எல்லாம் செய்தால் உங்கள் வீடு பார்ப்பதற்கு ஜோராக இருக்கும்..!

ஒவ்வொருவருக்கும் வீடு அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருப்பவர்கள் இது போல உங்கள் வீட்டை செய்வதின் மூலம் பார்ப்பதற்கு படுஜோராக இருக்கும்.

அதற்காக நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய குறிப்புகள் கீழே உள்ளது.

1.உங்கள் வீட்டில் இருக்கும் தரைகளை நீங்கள் தினமும் சுத்தப்படுத்துவது போல சமையல் அறையில் இருக்கும் சமையல் மேடை மற்றும் சிங்க் – கை நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்வதின் மூலம் பளிச்சென்று இருப்பதோடு வீடே பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்

2.பிரிட்ஜில் உள்ள காய்கறி பழ வகைகளை சரியான படி நீங்கள் அடுக்கி வைப்பதின் மூலமும் உங்களுக்கு ஃப்ரிட்ஜில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கும். மேலும் பிரிட்ஜை அடிக்கடி சுத்தப்படுத்துவதின் மூலம் எந்த வித வாடையும் ஏற்படாமல் பார்ப்பதற்கு புது பிரிட்ஜ் போல் பொருட்கள் கெடாமல் இருக்கும்.

3.சமையலுக்காக வாங்கி வைக்கும் பொருட்களை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துப் பார்த்து அதில் பூச்சி புழு ஏற்பட்டு இருந்தால் வெயிலில் வைத்து உலர்த்துவது அவசியமான ஒன்றாகும்.

4.வீடுகளில் வைத்திருக்கும் பொருட்களின் மீது தூசி படராமல் இருக்க அடிக்கடி தூசி துடைப்பதின் மூலம் நீங்கள் அந்த பொருட்களை பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். தூசி படியாதவரை பொருட்களின் மீது பூச்சிகளும் வராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

5.நீங்கள் எடுக்கின்ற பொருளை அதே இடத்திலேயே திருப்பி வைப்பதன் மூலம் நமது வீட்டில் எந்தெந்த பொருட்கள் எந்தெந்த இடத்தில் இருக்கும் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளுதல் மூலம் உங்கள் வீட்டை அழகாக பராமரிக்க முடியும்.

6.வீட்டில் உள்ள அனைவருமே ஒன்று கூடி வீட்டை அலங்கரிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் பணி செய்தால் பத்தாது. எல்லோருக்கும் வீடு நீட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலே வீட்டை சிறப்பாக நீங்கள் மாற்றி விடுவீர்கள்.

எனவே மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் கடைப்பிடித்து உங்கள் பிள்ளைகளையும் அந்த மாதிரியான சின்ன சின்ன பணிகளை செய்ய கூறும் போது உங்கள் வீடு எப்போதும் பார்ப்பதற்கு புதிய வீடு போல் இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …