“அட.. இது நம்ம வீடா..? என நீங்களே ஆச்சரியம் பட வேண்டுமா..?” – இதோ வீட்டு பராமரிப்பு டிப்ஸ்…!

அப்படி இருக்கக்கூடிய வீட்டை… அடடா இது உங்கள் வீடா என்று ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்ற நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான வீட்டு பராமரிப்பு டிப்ஸ் இதோ இதை நீங்கள் பாலோ செய்தாலே போதும் உங்கள் வீடும் படு ஜோராக இருக்கும்.

 

 டிப்ஸ் 1

 நீங்கள் வீட்டுக்கு என்று எந்த பொருளை வாங்குவதற்கும் முன்பு அந்த பொருள் உங்கள் வீட்டுக்கு தேவை தானா அதை வைத்துக் கொள்ள போதுமான இடவசதி உங்கள் வீட்டில் உள்ளதா என்பது போன்ற கருத்துக்களை நீங்கள் ஒன்று அல்ல இரண்டு முறை யோசித்து தான் அந்த பொருளை வாங்க வேண்டும்.

 டிப்ஸ் 2

 உங்கள் வீட்டில் போதுமான அளவு சூரிய வெளிச்சம் பட்டால் மட்டும் தான் வீடு பார்ப்பதற்கு மிகப் பெரிய வீடு போல தோற்றமளிக்கும். அத்தோடு உங்கள் வீடுகளில் மென்மையாக இருக்கக்கூடிய  இளம் நிற வண்ணத்தை வீட்டின் சுவர்களுக்கு அடிக்க வேண்டும். அப்போது சின்ன வீடாக இருந்தாலும் அது உங்களுக்கு பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொடுக்கும்.

டிப்ஸ் 3

 சில முக்கியமான பொருட்களை நீங்கள் கட்டிலின் அடிப்பகுதி அல்லது பீரோக்களின் கீழ் பகுதியில் வைத்துக் கொண்டால் இட வசதி உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

 மேலும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அந்த இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டாலும் எளிதில் அந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து எடுத்துக் கொள்ள உதவும்.

டிப்ஸ் 4

 அடிக்கடி உங்கள் வீட்டில் தூசி பிடிப்பதால் அதை தட்டுவதற்கு கூட நேரமில்லை என்று கருதுபவர்கள் இனி அந்த பொருட்களின் மீது ஏதாவது  விரிப்புகளை விரித்துவிட்டால் உங்கள் வேலையை அது சுலபமாக்கும்.

 அப்படி இல்லை என்றால் பாலீதின் கவர்களுக்குள் அந்த பொருட்களை வைத்து கட்டி அப்படியே வைத்து விடுங்கள். வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ அந்த கவர்களை மட்டும் நீக்கிவிட்டால் போதும். நீங்கள் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் புதுசு போல் பளபளவென காட்சி அளிக்கும்.

டிப்ஸ் 5

 வீட்டின் தரைப்பகுதிகளில் நீங்கள் கால்மிதிகளை போட்டு இருக்கிறீர்களா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கால்மிதிகள் இருந்தால் கட்டாயம் அழுக்கு படிவது நிலத்தில் தடுக்கப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

டிப்ஸ் 6

 வீட்டு சுவர்களில் எங்காவது விரிசல் அல்லது ஓட்டை காணப்பட்டால் அதை நீங்கள் சரி செய்வதற்கு பதிலாக அந்தப் பகுதியில் அழகிய சுவர் ஓவியங்களை வாங்கி ஓட்டும் போது அல்லது மாட்டும் போது அந்த பகுதியில் இருக்கக்கூடிய விரிசல் ஓட்டை ஆகியவை மறைந்துவிடும்.

இந்த டிப்ஸை ஃபாலோ செய்து உங்கள் வீட்டை மேலும் அழகு படுத்துங்கள் அழகான வீட்டில் அமைதியோடு வாழ்வதற்கு இது வழிவகை செய்யும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …