“உங்க வீட்டு மிக்ஸி எப்பவுமே புதுசா மின்னணுமா? ” – இதை ஃபாலோ பண்ணாலே நீண்ட நாள் உங்கள் மிக்ஸி உழைக்கும்..!

பட்டி தொட்டி முதல் அனைவரும் வீட்டிலும் மிக்ஸி இல்லாமல் இல்லை. உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடிய இந்த மிக்ஸி குறைந்த ஆயுள் வரை தான் உழைக்கிறது. இதற்கு காரணம் அதை சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பது தான்.

எனவே உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மிக்ஸி நீண்ட நாள் உழைக்கவும், பழுது ஏற்படாமல் பக்காவாக இருக்கவும், பளபளப்பாக புதிது போல் மின்னவும் சில டிப்சை ஃபாலோ செய்தால் போதுமானது. அது என்னென்ன டிப்ஸ் என்பதை இப்போது பார்க்கலாம்.

👌மிக்ஸியின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் பூஜ்சை வேகமாக பிடித்திருந்தால் அது ரப்பர் ஆக இருப்பதால் சில சமயம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அடியில் ஒரு மரப்பலகையை போட்டு வைப்பதன் மூலம் ஈசியாக எல்லா பகுதிக்கும் நகர்த்த முடியும்.

👌அது போலவே மிக்ஸியில் ஒயரை மடித்து வைக்கும் போது பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த ஒயரை எப்போதும் நீங்கள் வட்ட வடிவமாக சுற்றி ரப்பர் பேண்டில் கட்டி விடலாம்.

👌 மிக்ஸி ஜாரின் உடைய ரப்பரை அடிக்கடி கழட்டி சுத்தம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் போது அந்த ரப்பர் லூசு ஆகிவிடும். ஜாரில் நீங்கள் அரைத்த பொருளின் வாசம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அதன் வாசத்தை போக்கவும் அழுக்குகள் இருக்கக்கூடிய பிளேடில் நீங்கள் கழுவும் போது டிஷ்வாஷை கொண்டு இரண்டு சுற்று சுற்றி எடுங்கள்.

👌 புத்தம் புது ஜார் போல மாறிவிடும் மிக்ஸி ஜாரின் பிலேடு மழுங்கி விட்டால் அதை நீங்கள் நன்றாக கழுவி முட்டை ஓடுகள் மற்றும் கல் உப்பை போட்டு சுற்றி எடுத்தால் பிளேடு கூர்மையாகிவிடும்.

👌 நீங்கள் அரைத்து முடித்ததும் எப்போதும் துடைக்கும் போது காட்டன் துணியை பயன்படுத்தி துடைத்து விடுங்கள். அதன் பின் காட்டனால் தேய்க்கப்பட்ட கவரை மாட்டி விடுவதின் மூலம் மிக்ஸி பார்ப்பதற்கு புதுசு போல் காட்சி அளிக்கும்.

👌 ஜாரின் உட்புறம் அழுக்குகள் இருந்தால் எலுமிச்சம் பழத்தோலை கத்தரித்து போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி நன்கு சுற்றி எடுத்தால் அழுக்கு கிருமிகள் நீங்கி வாசம் சூப்பராக இருக்கும்.

 மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மிக்ஸியை நன்கு பராமரிப்பதினால் நீண்ட ஆயுளுடன் உங்களுக்கு உழைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …