“உங்க வீட்டு அழுக்கான சுவர் அழகாக..!” – இப்படி சுத்தம் செய்யுங்க..!

நமது வீட்டு சுவர்களில் அழுக்கு மற்றும் கரைகள் படிந்திருக்கும். குறிப்பாக இளம் குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் அந்தக் குழந்தைகள் கலர் பென்சில் மற்றும் பேனாமைகளை கொண்டு சுவற்றில் கிறுக்கல்களை கிறுக்கியும், ஏதாவது வரைந்தும் வைத்திருப்பார்கள். மேலும் பெரியவர்களின் கைரேகைகள் கூட சில சமயம் பதிந்து இருக்கும்.

சுவற்றில் இருக்கும் கறைகளை எளிதில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டு சுவர் பார்ப்பதற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்ட சுவரை போல் இருக்கும்.

சுவற்றில் உள்ள கறைகளை எளிதாக போக்க கூடிய வழிமுறைகள்

நீங்கள் உங்கள் வீட்டில் சுவர்களில் படிந்திருக்கும் அழுக்கு கரை, கை ரேகைகள், எண்ணெய் பிசுக்கு மற்றும் க்ரேயான் கறைகளை சரி செய்ய நீங்கள் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் என்னென்ன தெரியுமா.

இதற்காக நீங்கள் தனி செலவில் எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தக்கூடிய லிக்விட், தண்ணீர், துடைப்பதற்கு மென்மையான துணி, பேக்கிங் சோடா, வினிகர் இருந்தாலே போதுமானது.

முதலில் நீங்கள் உங்கள் சுவரை சுத்தப்படுத்துவதற்கு முன்பு சுவரை சுத்தப்படுத்தக்கூடிய நீர் மற்றும் அழுக்குகள் உங்கள் தரையில் படியாமல் இருக்க சுவரின் அருகில் ஒரு புடவை அல்லது ஏதேனும் ஒரு விரிப்பை விரித்து விடுவது நல்லது.

எப்படி நீங்கள் சுவரின் பக்கத்தில் விரிப்புகளை விரித்து விட்ட பிறகு மென்மையான துணியை பயன்படுத்தி தூசி, அழுக்கு மற்றும் சிலந்தி வலைகளை அகற்றுங்கள். இதற்காக நீங்கள் வாக்கும் கிளீனரையும் பயன்படுத்தலாம்.

இதனை அடுத்து நீங்கள் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை வைத்து எடுத்துக்கொண்டு அதில் சில சொட்டுக்கள் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு இதை துணியில் நனைத்து எடுத்து உங்கள் சுவர்களில் லேசாக தேய்த்து விடுங்கள்.

மேலும் நீங்கள் தேய்க்கும் போது அந்தப் பகுதியில் மரச்சாமான்களோ வேறு ஏதேனும் இருந்தால் அதை சற்று நகர்த்தி வைத்துவிட்டு நன்கு அழுத்தம் கொடுத்து தேய்ப்பதின் மூலம் சுவரில் ஒட்டி இருக்கும் அழுக்கு மற்றும் பிசுக்கு வந்துவிடும். அது மட்டும் இல்லாமல் பிள்ளைகள் வரைந்த ஓவியமும் எளிதில் மறைந்து போகும்.

இதனை செய்து முடித்த பிறகு மற்றொரு துணியால் சாதாரண நீரில் அந்த துணியை முக்கி மீண்டும் சுவற்றை துடைக்கவும்.

பிறகு நீங்கள் ஒரு உலர்ந்த துணியை எடுத்து சுத்தம் செய்யப்பட்ட சுவரை துடைத்து விடுங்கள். சுவர் விரைவாக உலர மின்விசிறியை போட்டு விடுங்கள்.

ஒரு சில இடங்களில் குழந்தைகள் அழுத்தம் கொடுத்து வரைந்து இருப்பார்கள். அந்த இடங்களை சுத்தப்படுத்த நீங்கள் பேக்கிங் சோடாவோடு வினிகரை கலந்து தேய்த்து விடவும். பிறகு அந்த இடத்தை நீங்கள் மீண்டும் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கொண்டு துடைத்து பிறகு உலர்ந்த நீரில் துடைக்கவும். இவ்வாறு செய்வதின் மூலம் அதிக அளவு இருக்கக்கூடிய கறைகளை எளிதில் வெளியேற்ற முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …