நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதின் காரணத்தால் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் பிரிவுக்கு காரணம் சமந்தாவின் அபரிமிதமான வளர்ச்சி தான். அவர் தொடர்ந்து வெற்றிகளை பெற்றதை அடுத்து நாக சைதன்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.
விவாகரத்துக்கு பிறகு தீவிரமான மர்ம நோயான மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதிலிருந்து வெளி வர சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும், திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.
அவர் வெளிநாட்டுகளுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறார். மேலும் சமந்தாவின் இந்த நிலைமைக்கு காரணம் இவரது முன்னாள் கணவர் என ரசிகர்கள் நாக சைதன்யா மீது வெறுப்பை காட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நாக தைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் எழுந்துள்ளது.
இதனை அடுத்து முதன்முறையாக கிசுகிசுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கும் சோபிதா துலி பாலா என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை வைத்திருக்கிறார்.
அத்தோடு அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என்று கிசுகிசு எழுதியவர்களுக்கு செருப்படி பதிலை தந்திருக்கிறார்.
தற்போது இணையம் முழுவதுமே அவர் தெரிவித்திருக்கும் பதிலை தான் அனைவரும் படித்து வைரல் ஆக்கிவிட்டார்கள். இதனை அடுத்து ரசிகர்களின் மனதில் இருக்கும் சந்தேகம் தீரக்கூடிய வகையில் நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.