“உங்க வீட்டில பல்லி இருக்கா..!”-அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி ஈஸியா விரட்டி அடிங்க..!!

வீட்டில் பல்லிகளால் ஏற்படக்கூடிய தொல்லைக்கு அளவே இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு உங்களுக்கு பல்லிகளை பார்க்கும் போதே அருவருப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த கட்டுரையை முழுமையாக படிப்பதின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் பல்லி தொல்லையில் இருந்து உங்கள் வீட்டை நீங்கள் சிறப்பாக பாதுகாக்க முடியும்.

இதற்காக நீங்கள் ரசாயனம் கலந்திருக்கும் பொருட்களைக் கொண்டு பல்லிகளை விரட்ட முற்படுவீர்கள். இதனால் நச்சுத்தன்மை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும். எனவே சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு எந்த பல்லிகளை விரட்ட எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்.

பல்லிகளை எளிய முறையில் விரட்டக்கூடிய வழிகள்

நீங்கள் காபி போட பயன்படுத்தும் காபித்தூளோடு சிறிதளவு மூக்குப் பொடியும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக மாற்றி அதை பல்லிகள் நடமாடும் இடங்களில் வைத்து விடுங்கள். இதனை பல்லிகள் உண்டு மடிந்துவிடும். இல்லை என்றால் அந்த இடத்திற்கு வராமல் அப்படியே சென்று விடும்.

பூச்சிகளை விரட்டக்கூடிய நாப்தலின் குண்டுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் வைத்து விடுவதின் மூலம் பல்லி தொல்லை குறைந்து விடும்.

மயிலிறகை பார்த்து பல்லிகள் பயப்படும் அதனால் பல்லிகள் இருக்கக்கூடிய இடத்தில் நீங்கள் மயில் இறகை வைத்து விடுங்கள். இதை பார்த்து பல்லிகள் ஒன்றுமே அந்த பகுதிக்கு வராது.

சாம்பாருக்கு பயன்படுத்தும் மிளகு தூளினை நீங்கள் சிறிதளவு நீரில் கலந்து அதை ஸ்பிரே செய்து விடுவதன் மூலமும் பல்லி தொல்லையிலிருந்து விடுதலை அடையலாம்.

வெங்காய சாறினை எடுத்து அதை பல்லியின் மேல் ஸ்பிரே பண்ணி விடுவதால் பல்லிகள் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே சாகும். அதுமட்டுமல்லாமல் கோழி முட்டையின் ஓடுகளை அது இருக்கும் பகுதியில் வைத்து விட்டால் வேறு ஏதோ பெரிய பிராணிகள் இருக்கிறது என்று அச்சத்தில் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும்.

பூண்டு பற்களை அங்கங்கு வைத்து விடுவதின் மூலம் பல்லியின் நடமாட்டத்தை குறைக்க முடியும். ஆனால் இந்த பூண்டு பல்கலை நீங்கள் வாரத்துக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். பூண்டில் இருக்கும் அந்த நறுமணம் இருக்கும் வரை தான் அது வேலை செய்யும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …