“இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த வேண்டுமா? – இந்த குறிப்புக்களை ஃபாலோ செய்யுங்க..!

இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த: இளம் வயதினற்கே இதய சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருகின்ற இந்த வேளையில் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருக்க இதயத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய பயனுள்ள சில முக்கிய குறிப்புகளை இந்த கட்டுரையில் படிக்கலாம்.

healthy heart

மேலும் இதய நோயின் அபாயத்தை இதன் மூலம் நீங்கள் எப்படி குறைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு எளிமையாக புரிந்து விடும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடிய வழிகள்

உடல் ரீதியாக நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் போது உங்களுக்கு இதய நோயின் ஆபத்து ஏற்படாது. மேலும் தினசரி உடப்பை உடற்பயிற்சி செய்வதின் மூலம் உங்கள் இதயம் மற்றும் சுவாச மண்டலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் நோய்களின் தாக்குதல்களில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

healthy heart

சமச்சீரான உணவுகளை தினமும் நீங்கள் சாப்பிடுவது கட்டாயமாகும். அதிக கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் மிகவும் நல்லது.மேலும் ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

40 வயதை அடைந்து விட்டவர்கள் கட்டாயம் இதய நோய், கொலஸ்ட்ரால், சர்க்கரை உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க மருத்துவ பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

healthy heart

ஆரோக்கியமான இதயத்திற்கு போதுமான அளவு தூக்கம், ஓய்வு முக்கியமானது. எனவே சராசரியாக ஒவ்வொரு மனிதரும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை தடுக்க பகல் வேளைகளில் சில உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

healthy heart

மேற்கூறிய இந்த கருத்துக்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் பயன்படுத்துவதன் மூலம் இதய நோய்களின் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்க முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …