“உங்கள் பிள்ளைகளின் தனித்திறமை தெரிய வேண்டுமா? – அப்ப நீங்க கோடை விடுமுறையை யூஸ் பண்ணுங்க..!!

வருகின்ற கோடை விடுமுறையை எப்படி கழிக்கிறது என்று தெரியாமல் முழிக்கின்ற பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் தனி திறமைகளை கண்டெடுக்க இந்த விடுமுறை நாட்களை நீங்கள் பயனுள்ளதாக மாற்றி அமைக்கலாம்.

அதற்காக இந்த விடுமுறையில் உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிள்ளைகளின் தனித்திறமை கண்டுபிடிக்கும் விதம்

நடனத்திறமை

உங்கள் பிள்ளைகளுக்கு நடனத்திறமை இருக்கலாம். எனவே பிள்ளைகளை நீங்கள் நடன வகுப்புக்கு அனுப்புவதின் மூலம் அல்லது அவர்களை உங்கள் வீட்டிலேயே ஒரு மணி நேரம் பாடல்களை போட்டு ஆட சொல்லுவதின் மூலம் நடன திறமை இருந்தால் அது எளிதில் வெளிவரும்.

பாடும் திறன்

உங்கள் பிள்ளைகளுக்கு இயல்பாகவே பாடும் குண நலன்கள் இருக்கலாம். அதை கண்டுபிடிக்க நீங்கள் அவர்களோடு இணைந்து பாடல்கள் பாடுவதை கேளிக்கையாக செய்யும் போது அவர்கள் இடையே பாடல் பாடும் அபாரத்தை திறமை இருந்தால் அவர்களை பாடல் பாடும் வகுப்புக்கு அனுப்பி வைக்கலாம்.

வரைதல் திறன்

 விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளுக்கு வரைதல் திறன் உள்ளதா என்பதை கண்டறிய அவர்களுக்கு அதிகளவு கலர் பென்சில் வரையக்கூடிய உபகரணங்களை கொடுப்பதன் மூலம் அவர்கள் வரைவதற்கு முற்ப்படுவார்கள்.

 அப்படி அவர்கள் வரையும் போது அவர்களுக்கு எந்த அளவு ஓவியத்தில் ஆர்வம் உள்ளது. எப்படி செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அவரை ஒரு ஓவியராக மாற்றி விடலாம்.

விளையாட்டு

உங்கள் வீட்டு குழந்தைகளிடையே விளையாட ஆர்வம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, மாலை ஒரு மணி நேரமாவது அவர்களை விடுமுறை என்று ரவுண்டுக்கு அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.

 விளையாட்டில் நல்ல ஆர்வம் அல்லது அவர்களுக்கு ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு அமர்ந்து பேசி மகிழ்வதின் மூலம் அவர்கள் அவர்களின் விருப்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் அவர்களது திறமையை நீங்களே கண்டுபிடித்து அவர்களை அந்த வழியில் அழைத்துச் சென்று மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த பெற்றோர்களான உங்களால் முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டீர்கள் என்றால் இந்த விடுமுறை காலத்தை நீங்கள் பயனுள்ளதாக மாற்றி அமைக்க முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …