“பொடுகு தொல்லையால் பிரச்சனையா? – டோன்ட் ஓரி இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

பொடுகு தொல்லை: இன்று இளம் தலைமுறை இடையே அதிக அளவு காணப்படக்கூடிய பிரச்சனையாக இந்த பொடுகு விளங்குகிறது. இந்த பொடுகு தொல்லையால் இவர்களின் முடி ஆரோக்கியம் இழந்து விரைவில் உதிர்ந்து போவதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு கூட இளைஞர்களும், இளங்கையர்களும் ஆளாகிறார்கள்.

Dandruff Treatment

 அப்படிப்பட்ட பொடுகை எளிதில் விரட்டி அடிக்க கூடிய சில டிப்ஸ் பற்றி எந்த கட்டுரையில் விளக்கமாகவும், விரிவாகவும் பார்க்கலாம்.

பொடுகை விரட்டி அடிக்க உதவும் டிப்ஸ்

உங்களுக்கு பொடுகு தொல்லை அதிக அளவு இருந்தால், வீட்டில் இருக்கும் வெந்தயத்தை எடுத்து ஒரு நாள் முன்பே ஊறவைத்துவிட்டு அதை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படுகின்ற உஷ்ணம் குறைந்து பொடுகு தொல்லை நீங்கும்.

Dandruff Treatment

வால் மிளகை தூள் ஆக்கி அதை பாலோடு கலந்து உங்கள் தலை முழுவதும் தேய்த்து விடுங்கள். குறிப்பாக பொடுகு இருக்கும் பகுதியில் தேய்த்து விட்டு கால் மணி நேரம் காத்திருங்கள். பிறகு நீங்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் பொடுகு தொல்லைக்கு விடை கொடுக்கலாம்.

தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதில் வெந்தய பொடியை போட்டு நன்கு காய்ச்சி, இளம் சூட்டில் உங்கள் தலைகளில் தேய்த்து விட்டு மறுநாள் காலை எழுந்து நீங்கள் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

விடுமுறை நாட்களில் பாசிப்பயிறு மாவில் தயிரை கலந்து அதை உங்கள் தலையில் நன்கு தேய்த்து ஊற விட்டு விடுங்கள் குறைந்தது. ஒரு மணி நேரத்துக்கு பிறகு நீங்கள் தலைக்கு குடிப்பதின் மூலம் உங்களுக்கு பொடுகு தொல்லை ஏற்படாது.

கண்ட,கண்ட ஷாம்பூக்களை பயன்படுத்தி உங்கள் முடிக்கு தேவையில்லாத ரசாயனங்களை கொடுப்பதன் மூலம் முடி உதிர்வு, பொடுகு ஏற்படும். எனவே அதை தடுக்க சீகக்காய் அரப்பு போன்றவற்றை போட்டு நீங்கள் குளிக்கலாம்.

Dandruff Treatment

துளசி, வேப்பிலை இவற்றை மைய அரைத்து உங்கள் தலைகளில் தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து எளிதில் விடுதலை பெற முடியும்.

வாரத்திற்கு ஒருமுறை மருதாணி இலையை அரைத்து அதன் சாறோடு எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் சேர்த்து குளிப்பதால் உங்களுக்கு பொடுகு தொல்லை ஏற்படாது.

மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள் கட்டாயம் உங்கள் பொடுகு தொல்லைக்கு மிகச் சிறந்த ரெமிடியாக இது இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …