“உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கருப்பு மிளகு..!” – இப்படி வளருங்கள்..!

கருப்பு மிளகு : பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. அத்தகைய சிறப்புமிக்க மிளகினை உங்கள் வீட்டில் வளர்ப்பதின் மூலம் கலப்படம் இல்லாத நல்ல மிளகினை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான பலனை பெற முடியும்.

 மேலும் இந்த மிளகு இந்திய சமையலறைகளில் வீற்றிருக்கும் ஒரு அற்புதமான மசாலா பொருள் என்று கூட கூறலாம்.இப்படிப்பட்ட கருப்பு மிளகினை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எப்படி வளர்க்கலாம் என்பதை பற்றிய பதிவை தற்போது பார்க்கலாம்.

பொதுவாகவே மிளகு செடிகள் அதன் விதைகளிலிருந்து எளிதாக வளரக்கூடியவை எனவே நீங்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த அடைந்த மிளகினை பயன்படுத்தி மிளகு செடிகளை உற்பத்தி செய்ய முடியும்.

மிளகினை ஒரு நாள் முழுவதும் நீரில் அப்படியே ஊற போட்டுவிட்டு மறுநாள் அதை எடுத்து நீங்கள் மண்ணில் போட்டு மேலே மண்ணை போட்டு தூவி விடுங்கள். இந்த மிளகுக்கு ஈரப்பதம் அதிக அளவு இருந்தால் உடனே வளர்ந்து விடும். எனவே தினமும் தண்ணீர் தெளிப்பதை மறவாமல் செய்யுங்கள்.

ஒரு வாரத்தில் மிளகு செடி வளர்ந்து வரும் வளர்ந்து வரும். அந்த மிளகு செடியை மேலும் பத்து நாள் கழித்து நீங்கள் குறைந்த அளவு சூரிய ஒளி படக்கூடிய பகுதியில் நடவு செய்யுங்கள்.

அவ்வாறு நடவு செய்வதற்கு முன்பு அந்த மண்ணில் போதுமான கரிம சத்துக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இரண்டு செடிகள் வைப்பீர்கள் என்றால் இரண்டுக்கும் இடையே ஆறு அடி அளவு  இடைவெளி தேவை.

இந்த மிளகு செடி பற்றி படர போதுமான குச்சி அல்லது தென்னை மரம் போன்ற பகுதிகளில் நீங்கள் நடவு செய்வதின் மூலம் அதைப் பற்றி ஏறி உங்களுக்கு விரைவில் பலனை கொடுக்கும்.

மற்ற செடிகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அதே அளவு பராமரிப்பை இந்த மிளகு செடிகளுக்கு கொடுத்தால் போதுமானது. மண்ணில் நல்ல ஆரோக்கியம், ஈரப்பதம் மிளகு செடிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பூச்சிகளில் இருந்து உங்கள் மிளகு செடியை காப்பாற்ற சிறிதளவு தழைக் சத்து இடவது மிகவும் நல்லது. செடிகளை சுற்றி குப்பைகளை போடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.மேலும் மிளகுக்கு அதிக அளவு உரம் தேவை இல்லை.மேற்கூறிய முறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் மிளகு செடியை வளர்த்தி பயனடையுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …