“என்ன செய்தாலும் மஸ்ரூம் கருத்து போகுதா? – இப்படி வச்சு பாருங்க பாஸ்..!

நீங்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அல்லது மார்க்கெட்டுகளில் வாங்கி வரும் மஸ்ரூம் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்து மறுநாள் பார்க்கும்போது அது கருத்து போய் விடுகிறதா?.

அப்படி கருத்து போகக்கூடிய மஸ்ரூம்-ஐ கருத்துப் போகாமல் வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெளிவு பெறலாம்.

Mushroom

நீங்கள் வாங்கி வந்திருக்கும் மஸ்ரூம் மை முதலில் பாலிதீன் கவர்லிருந்து அகற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி விட்டு அதை திசு பேப்பரின் மேல் போட்டு துடைத்து விடுங்கள்.

பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அந்தப் பாத்திரத்தின் அடியில் ஒரு திசு பேப்பரை வைத்துவிட்டு மஸ்ரூமை போட்டு மேலே திசு பேப்பரை போட்டு வைத்து இறுக்கமூடி உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்கள் மஸ்ரூம் கருத்து போகாமல் இருக்கும்.

Mushroom

மேலும் நீங்கள் வாங்கி வந்த மஷ்ரூமை உடனடியாக உங்கள் பிரிட்ஜில் வைப்பதின் மூலம் மஷ்ரூம் ஒரிஜினலாக அப்படியே இருக்கும் கருமை நிறம் அடையாது.

பிரிட்ஜில் மஸ்ரூமை வைக்கும் போது நீங்கள் காய்கறி ட்ரேயில் வைப்பதினால் மஸ்ரூம் ஈரப்பதம் அதிகரித்து, விரைவில் கெட்டுப் போகலாம். எனவே தனியாக ஒரு இடத்தில் இதை வைப்பது மிகவும் நல்லது.

நீங்கள் கழுவிய பிறகு உங்கள் மஸ்ரூமை பேப்பர் பேக்கில் போட்டு சுற்றி வைப்பதின் மூலம் நீண்ட நாள் கருத்துப் போகாமல் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

Mushroom

மேலும் நீண்ட நாட்கள் இந்த மஸ்ரூமை நீங்கள் வைத்திருந்து சமைக்க திட்டமிட்டு இருந்தால் லேசாக மஸ்ரூமை வதக்கி அதை பிரீசரில் சேமித்து வையுங்கள். பத்து நாட்கள் ஆனாலும் அது அப்படியே இருக்கும்.

மேற்கூறிய குறிப்புகளை நீங்களும் பயன்படுத்தி நீங்கள் வாங்கி வரும் மஷ்ரூமை நீண்ட நாள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதே தரமான சுவையில் நீங்கள் சமைக்கலாம். இந்த குறிப்பை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு பயன்படும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …