முக அழகை பராமரிப்பதில் மேஜிக் செய்யும் பீட்ரூட் பேஸ் பேக்…!! எப்படி செய்வது தெரியுமா?

முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்களையும் கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் தடுக்கக்கூடிய ஆற்றல் பீட்ரூட்டுக்கு உள்ளது. அது மட்டும் இல்லாமல் சருமத்தில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி சருமத்துக்கு தேவையான வைட்டமின் ஏ, சி, கே போன்றவற்றை கொடுத்து சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ரூட் பேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

 பீட்ரூட் பேஸ் பேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்

  1. பீட்ரூட் 1

       2.தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்

  1. ரோஸ் வாட்டர்

 செய்முறை

முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி தோளினை செதுக்கி எடுத்து வைத்து விடவும், பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

 அரைத்த இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனை அடுத்து சிறிது நேரம் கழிந்த பின் ரோஸ் வாட்டரை இதனுடன் சேர்க்க வேண்டும்.

 பயன்படுத்தும் முறை

முதலில் உங்கள் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி அப்படியே காய விடவும் பிறகு இந்த பேஸீ பேக்கினை எடுத்து தடவி மணி நேரம் காத்திருக்கவும்.

 இது நன்கு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனை அடுத்து முகத்திற்கு தேவையான மாய்ஸ்சரைசர் கிரீம்மை நீங்கள் தடவிக் கொள்ளலாம்.

மேலும் இந்த பீட்ரூட்டில் இரும்புச்சத்து ,காப்பர், பொட்டாசியம் போன்றவை அதிக அளவு இருப்பதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு முகத்தில் நிறத்தை மேம்படுத்தக்கூடிய நிறமிகளை ஊக்கப்படுத்தக்கூடிய தன்மையும் உள்ளது.

எனவே தினமும் பீட்ரூட்டை உண்பதாலும் உங்கள் முகம் சிவப்பாக மாறத் துவங்கிவிடும். இது முகத்தில் இருக்கக்கூடிய சரும துளைகளை திறக்க உதவி செய்வதால் முகம் எப்பொழுதுமே பளிச் என்று புத்துணர்வோடு காட்சியளிக்கும்.நீங்களும் இதை பயன்படுத்திப் பார்த்து உங்களது அபிப்ராயத்தை கூறுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …