“கொளுத்தி எடுக்கும் வெயில் நீங்கள் கூல்லாக ஃபலூடா..!” – இப்படி செய்யுங்க..!

ஃபலூடா ரெசிபி: கோடை விடுமுறை வந்துவிட்டது. பெற்றோர்களுக்கெல்லாம் திண்டாட்டம் என்று சொல்லக்கூடிய அளவில் அவர்கள் குழந்தைகள் செய்யக்கூடிய சேட்டைகளை எண்ணி இப்போதே பயத்தில் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் கோடையில் அவர்களை குளுமையாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்து வைத்திருப்பார்கள்.

Falooda

அந்த வகையில் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான ஃபலூடா ரெசிபியை உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் மன மகிழ்ச்சியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்களைப் போற்றி புகழவும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஃபலூடா எப்படி செய்வது என்று எந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள்

1.ரோஸ் எசன்ஸ் இரண்டு டீஸ்பூன்

2.பால் ஒரு லிட்டர்

3.கிரீம் அரை கப்

4.ரோஸ் சிரப் கால் கப்

5.வெண்ணிலா ஐஸ்கிரீம் சிறிய கப் 2

6.சப்ஜா விதைகள்

7.சேமியா ஒரு கப் 8.நறுக்கிய பழங்கள்

9.நட்ஸ்

Falooda

செய்முறை

முதலில் பாலை நீங்கள் சுண்ட காய்ச்ச வேண்டு.ம் அதாவது ஒரு லிட்டர் பாலை குறுகி அரை லிட்டராக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு நீங்கள் இரண்டு ஸ்பூன் அளவு ரோஸ் எசன்ஸ் கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள்.

பிறகு நீங்கள் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைக்கவும். அதே சமயத்தில் சேமியாவில் நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

இது வேகும்போதே உங்களிடம் இருக்கும் எந்த விதமான பழங்கள் என்றாலும் அதை எல்லாம் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Falooda

இதனை அடுத்து நீங்கள் ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஸ் சிரப்பை ஊற்றி விட வேண்டும். அதனை அடுத்து நீங்கள் வேக வைத்திருக்கும் சேமியாவை போடுங்கள்.

சேமியாவை போட்ட பிறகு ஊற வைத்திருக்கும் சப்ஜா விதையை வடித்து எடுத்து சேமியாவின் மேல் சேர்த்து விடுங்கள். இதனை அடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் பாலை எடுத்து அதன் மேலே ஊற்றவும்.

Falooda

பிறகு நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பழங்களை அதனுள் சேர்த்து விட்டு இரண்டு பெட்டியில் இருக்கும் ஐஸ்கிரீமை எடுத்து இந்த கண்ணாடி டம்ளரில் போட்டுவிட்டு அதன் மேல் நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் நட்பை அப்படியே பரவலாக தூவி விடுங்கள்.

இப்போது சூப்பரான வீட்டிலேயே செய்த ஃபலூடா ரெடி. இதை பார்த்தால் உங்கள் பிள்ளைகள் உடனே குடித்து விடுவார்கள் மீண்டும் மீண்டும் என்று கேட்பார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …