பல வகைகளில் வீடுகளில் நீங்கள் முருங்கைக்காய் சாம்பாரை வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படி தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களுக்கு முருங்கைக்காய் சாம்பார் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
ஆனால் உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டக்கூடிய நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா.
முருங்கைக்காய் சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்
1.250 கிராம் துவரை பருப்பு
2.10 சின்ன வெங்காயம்
3.இரண்டு முருங்கைக்காய்
4.தக்காளி 2
5.பச்சை மிளகாய் 3
6.காந்தாரி மிளகாய் 4
7.பத்து பல் பூண்டு
8.இரண்டு கத்திரிக்காய்
9.கடுகு,
10.சீரகம்
11.உளுத்தம் பருப்பு
12.நெய்
13.மஞ்சள் தூள்
14.மிளகாய் தூள்
15.சீரகத்தூள்
16.பெருங்காயத்தூள்
17.புளி கரைசல்
18.எண்ணெய்
19. உப்பு தேவையான அளவு
செய்முறை
துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் முன்னதாக ஊற வைத்து பின் குக்கரில் மூன்று முதல் நான்கு விசில் விட்டு வேகவைத்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை மிதமான நெருப்பில் வைத்துக்கொண்டு வாணலியில் எண்ணெயை ஊற்றி வைக்கவும்.
எந்த எண்ணை சூடான பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
இது வதங்கும் போதே முருங்கக்காய் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து நன்கு வதக்கவும். இதன் பிறகு பொடி பொடியாக தக்காளியை நறுக்கி போட்டு தேவையான அளவு நீர் இணையும் விட்டு வேகும் வரை காத்திருக்கவும்.
முக்கால் பங்கு முருங்கைக்காய் வெந்த பிறகு இதில் நீங்கள் கத்திரிக்காயை வெட்டி போடவும் கத்திரியும் முருங்கையும் ஓரளவு வெந்த பிறகு புளி கரைசலை கரைத்து ஊற்ற வேண்டும். பிறகு எந்த கலவை கொதிக்க கூடிய நிலையில் குக்கரில் வைத்திருக்கும் பருப்பில் சிறிதளவு தண்ணீரை விட்டு அந்த கலவையை நீங்கள் வாணலியில் மாற்றி விடுங்கள்.
இந்த கலவையை ஒன்றாக கலக்கி விட்டு மிதமான நெருப்பில் அப்படியே வைத்திருக்கவும். குறிப்பிட்ட அளவு கொதி வந்தவுடன் வேறொரு வானொலியில் கருவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் இவற்றையெல்லாம் வறுத்து அரைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொடியை கொதித்துக் கொண்டு இருக்கக்கூடிய அந்த சாம்பாரின் மேல் போட்டு அப்படியே கிளறி விடவும் இதனை அடுத்து மீண்டும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நீங்கள் தாளிசம் செய்ய தேவையான கடுகு உளுத்தம் பருப்பை போட்டு வெடிக்க விட்டு அந்தக் கலவையை சாம்பாரில் போடவும்.
சாம்பாரில் சிறிதளவு நெய்யை ஊற்றி கொத்தமல்லி இலைகளை தூவி விடுங்கள் இப்போது சூடான சுவையான சாப்பிட கடிக்காத நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் தயார்.