” இரும்பு சத்து நிறைந்து..! ” குழந்தைகள் விரும்பி கேட்கும் – மினி ராகி தட்ட வடை..!

சிறுதானியங்களில் நமது முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்திய ராகி பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. கோடை வந்துவிட்டாலே கம்மங்கூழ் போலவே ராகி கூழுக்கும் மவுசு கூடிவிடும். ஆனால் இந்த ராகியை கூலாக குடிக்க குழந்தைகள் தயங்குவதோடு விருப்பமும் பட மாட்டார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிகளவு வாரித்தரும் ராகியை மினி ராகி தட்ட வடை செய்து கொடுப்பதின் மூலம் விரும்பி உண்ண வைக்க முடியும்.

மேலும் இந்த மினி ராகி தட்ட வடை மொறுமொறுவென இருப்பதால் கிஸ்பியாக இருக்கும் இந்த ராகி  தட்ட வடையை வேண்டும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சுவைப்பார்கள்.

மினி ராகி தட்டவடை செய்ய தேவையான பொருட்கள்:

1.ராகி மாவு 250 கிராம்

2.பொட்டுக்கடலை 50 கிராம்

3.ஓமம் ஓரு டீஸ்பூன்

4.சிறிதளவு சீரகம்

5.தேவையான அளவு உப்பு

6.பொடி பொடியாய் நறுக்கிய கருவேப்பிலை

7.பொடி பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம் பத்து

 8.பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

 செய்முறை

 முதலில் ஒரு பௌலில் 250 கிராம் ராகி மாவை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பையும் போட்டு விடுங்கள்.

 இதனோடு எடுத்து  வைத்து இருக்கும் ஓமம், சீரகம் போன்றவற்றை  போட்டு சிறிது சிறிதாக நீரை ஊற்றி நன்கு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

 அதன் பிறகு இந்த கலவையோடு எடுத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இறுதியாக நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையும் கலந்து ஒன்றாக அனைத்தையும் பிசைந்து கொள்ள வேண்டும்.

 இதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து விட்டு எண்ணெயை ஊற்றுங்கள். எனண்ணெய் நன்றாக சூடான பிறகு இந்தக் கலவையை சின்ன சின்ன உருண்டையாக அதாவது ஒரு  சுண்டைக்காய் அளவு எடுத்துக்கொண்டு அதை தட்டி தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

 இப்போது சூடான சுவையான மினி ராகி தட்டவடை ரெடி. ராகி கூல்லை விரும்பாத குழந்தைகள் இந்த தட்ட வடையை விரும்பி தின்னும்.மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த பண்டத்தை உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version