“மனம் விரும்புதே உன்னை.. உருளைக்கிழங்கு..!” – செமத்தியான ஸ்நாக்ஸ்..!

உருளைக்கிழங்கு என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே விரும்பக்கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று என்று கூறலாம். இந்த உருளைக்கிழங்குக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அப்படிப்பட்ட இந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்நாக்ஸை செய்து கொடுத்தால் சும்மா விடுவார்களா? நிச்சயமாக ஒரு பிடி பிடிப்பார்கள்.

Potato snacks

அப்படி அவர்கள் ஒரு பிடி பிடிக்க நீங்கள் இந்த உருளைக்கிழங்கை கொண்டு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுங்கள். இனி அவர்கள் உங்கள் பின்னாடி சுத்தி வந்து இந்த பண்டத்தை வேண்டி நிற்பார்கள்.

சூப்பர் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

1.வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு எட்டு

2.கான்பிளவர் மாவு 5 டீஸ்பூன்

3.அரிசி மாவு 5 டீஸ்பூன்

4.வர மிளகாய் பொடி காரத்துக்கு ஏற்ப

5.கருவேப்பிலை பொடி பொடியாய் நறுக்கியது சிறிதளவு

6.உப்பு தேவையான அளவு

7.பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

Potato snacks

முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலை உரித்து எடுத்துக்கொண்டு பின்பு மைய மசித்து கொள்ளுங்கள்.மேலும் மசித்த இந்த உருளைக்கிழங்கோடு கான்பிளவர் மாவு, அரிசி மாவு,மிளகாய் தேவையான அளவு உப்பு போன்றவற்றை போட்டு நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதை சின்ன சின்ன வடிவங்களாக மாற்றி வைத்து விடுங்கள்.இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடான பிறகு நீங்கள் பல்வேறு வடிவங்களில் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்.

#image_title

இப்போது அனைவரும் விரும்பும் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் அருமையாக தயாராகிவிட்டது.இதனை பார்த்ததுமே நாவில் எச்சிலை ஊற வைக்கும் எந்த பண்டத்தை உங்கள் வீட்டில் செய்து உங்கள் பிள்ளைகள் மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சுவைக்க செய்து கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …