“அசைவ சமையலில் புதுசா அசத்த சுறா மீன் புட்டு..!” – செய்து பாருங்க..!

சுறா மீன் புட்டு: அசைவ சமையல் பிரியர்களில் மீன் பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த மீனை மீன் குழம்பு, மீன் வருவல் என்று பல வகைகளில் சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இதனை புட்டாக செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

sura-puttu-fish-puttu

இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த சமையல் பதிவில் நீங்கள் பார்ப்பது சுறா மீன் புட்டு எப்படி செய்வது என்பது பற்றிய விரிவான விளக்கத்தை தான். இனி இந்த சுறா மீன் புட்டு செய்ய என்னென்ன தேவை, எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

சுறா மீன் புட்டு செய்ய தேவையான பொருட்கள்

1.சுறா மீன் ஒரு கிலோ

2.மிளகுத்தூள் 2 டீஸ்பூன்

3.சோம்பு அரை டீஸ்பூன்

4.பூண்டு பதினைந்து பல்

5.இஞ்சி ஒரு துண்டு

6.சின்ன வெங்காயம் ஒரு கப்

7.பச்சை மிளகாய் 4

8.எலுமிச்சை சாறு அரை மூடி

9.கருவேப்பிலை தேவையான அளவு

10.உப்பு

11.நல்லெண்ணெய்

sura-puttu-fish-puttu

செய்முறை

முதலில் நீங்கள் வாங்கி வந்திருக்கும் சுறா மீனை நன்கு சுத்தம் செய்து கொண்டு பிறகு துண்டு போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

பிறகு இதனை உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். இது வெந்த பிறகு இதில் இருக்கும் தோல், முள் போன்றவற்றை சுத்தமாக நீக்கிவிட்டு மீன் துண்டுகளை நன்கு பொடியாக மசித்து விடுங்கள்.

sura-puttu-fish-puttu

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நல்லெண்ணையை விட்டு எண்ணெய் சூடானதும் சோம்பு பொடி, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை போட்டு நன்கு வதக்கவும். இந்தக் கலவை வதங்கிய பிறகு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நீங்கள் கிளறவும்.

இந்தப் பொருட்களின் இருந்து பச்சை வாசம் நீங்கிய பின், இவை நன்கு வதங்கிய பிறகு நீங்கள் மசித்து வைத்திருக்கும் மீனை சேர்த்து கிளறுங்கள். அதுமட்டுமல்லாமல் அதில் நீர் இருந்தால் அது வத்தும் வரை கிளறுவது மிகவும் அவசியமாகும்.

sura-puttu-fish-puttu

நீர் வற்றி நல்ல டிரை பக்குவத்தில் இருக்கும் போது நீங்கள் இறுதியாக மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கிண்டி விடவும். இப்போது சூப்பரான சுறா புட்டு தயாராக உள்ளது. சூடாக இதை உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …