“உங்க வீட்ல நஞ்சில்லாத காய்கறி தோட்டம் அமைக்கிறீர்களா..!” அப்ப இதை ஃபாலோ பண்ணலாமே நீங்க..!!

இன்று படு வேகமாக வளர்ந்து வரும் ராக்கெட் யுகத்தில் மனிதனின் தேவைக்கு ஏற்ப பயிர்களை பயிரிடுவதற்கு போதிய அளவு இயற்கை உரங்களை விட செயற்கை உரங்களை தான் நம்ப வேண்டி உள்ளது.

 இதனை அடுத்து நாம் உண்ணும் உணவே நமக்கு நஞ்சாக மாறி வருவது அனைவருக்கும் தெரிந்த போதிலும் அதை தவிர்க்க முடியாத காரணத்தினால் நாம் தொடர்ந்து மெல்ல கொல்லும் நஞ்சினை உணவாக எடுத்து வருகிறோம்.

தற்போது இது சம்மந்தப்பட்ட விழிப்புணர்வுகள் அதிகரித்து வருவதால் தங்கள் வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே பயிரிட்டு வருகிறார்கள். அப்படி செய்யும் போது நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய சில டிப்ஸ் உள்ளது அதை இப்போது பார்க்கலாம்.

☺️ வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன்னால் நீங்கள் என்னென்ன செடிகளை வளர்க்கலாம் என்பதை பற்றி தேர்வு செய்து பின்னர் அதற்கு எவ்வளவு நீர் ஊற்ற வேண்டும் சூரிய ஒளி இடம் எவ்வளவு தேவை என்பதை கணித்த பின்னர் மட்டுமே அந்த செடிகளை தேர்வு செய்து நட வேண்டும்.

 ☺️கீரை செடிகளை பயிரிடும்போது பெருமளவு வெயில் தாக்குதல் இல்லாத இடங்களில் அதை பயிர் செய்வது மிகவும் நல்லது. இல்லை என்றால் கீரை செடிகளுக்கு மேல் பச்சை நிற பந்தல் ஏதேனும் போட்டு அதற்கு அடியில் கீரையை பயிரிடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

☺️ ஆரம்பத்தில் நீங்கள் வீட்டில் தோட்டத்தை அமைக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீரை மற்றும் மிளகாய் போன்ற வகைகளை பயிர் செய்து பழகலாம். அதனை அடுத்து தக்காளி செடிகளை பயிரிட்டு நீங்கள் வளர்க்கலாம்.

 😊ஒரே தொட்டிக்குள் இரண்டு முதல் மூன்று  வகை உள்ள செடிகளை பயிரிட்டு வளர்க்கலாம். இதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்த்து உங்களால் பயன் தர முடியும். மேலும் நீங்கள் பயிரிட்டு இருக்கக்கூடிய செடிக்கு உரிய நேரத்தில் நீர் பாய்ச்சுவது அவசியம் அல்லது சொட்டுநீர் முறைப்படி நீங்கள் தண்ணீரை அந்த செடிகளுக்கு விடலாம்.

☺️ இதனை அடுத்து செடிக்கு தேவையான உரத்தை நீங்கள் தரவேண்டும். பொதுவாக இயற்கை உரங்களை நீங்கள் பயன்படுத்தினால் அது நன்மை பயக்கும் அதற்காக கடைகளில் சென்று நீங்கள் இயற்கை உரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

☺️சமையலறை கழிவுகளில் கிடைக்கும் குப்பைகளை மக்கச் செய்து அதை அடியூரமாக உங்கள் செடிகளுக்கு போட்டாலே போதுமானது. உங்கள் வீட்டுத் தோட்டத் செடியில் பூச்சி ஏதும் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

☺️ அவ்வாறு பூச்சிகள் தாக்கி இருந்தாலும் சோப்பு கரைசல், டிஷ் வாஷ் நீர் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அடித்தல் அல்லது வேப்ப எண்ணெயை நீரில் கலந்து செடிகளின் மேல் தெளித்தல் போன்றவற்றை செய்யும் போது பூச்சி தொல்லைகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …