வீட்டிலேயே ஐஸ்கிரீமா? எப்படி ?

கோடை என்றாலே  குளிர்ச்சியை தான் அனைவரும் விரும்புவார்கள். அதைப்போல குளிர்ந்த தண்ணீர், பழங்கள்,ஜூஸ் வகைகளை சாப்பிட  வேண்டும் என்ற உத்வேகம் நம்மில் எழுவது இயற்கைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கக் கூடிய  ஐஸ்கிரீமை நம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஐஸ்கிரீமை தொடர்ச்சியாக சாப்பிடாமல் அவ்வப்போது இடைவெளிவிட்டு சாப்பிடுவது தான் மிகவும் சிறப்பானது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்

முட்டை – 3

சக்கரை – 3/4 கப்

வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா எசென்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – சிறிதளவு

முந்திரி – 5

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் 30 நிமிடம் கலந்து விட்டுக்கொண்டே இருக்கவும். பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

பின்னர் 3 முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்து கூடவே சர்க்கரை சேர்க்கவும். பிறகு கொஞ்சம் பால் கலந்து வெண்ணை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் ஒரு கடாயில் பால் ஊற்றி வெண்ணெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும்.

அதனை அடுத்து 8 நிமிடம் வரை கொதிக்க விட்டு அதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.இது முழுவதும் ஆறியவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 3 முதல் 4 மணி நேரம் வரை பிரீசரில் வைக்கவும்.

நான்கு மணி நேரம் கழித்து இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் பின்னர் முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது நாம் விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீம் நமது வீட்டிலேயே தயார்  நிலையில் உள்ளது சுவைத்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று எனக்குக் கூறுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam