“கழுத்து சதை அப்படியே கீழ தொங்குதா..!” – இந்த பயிற்சிய செய்து பாருங்க..!!

இன்று இளம் வயதில் இருக்கும் நபர்களுக்கு கூட உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் கழுத்துக்கு கீழ் சதை தொங்கக்கூடிய நிலையில் உள்ளது. அப்படி கழுத்துக்கு கீழ் சதை தொங்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் எளிமையான பயிற்சிகளை செய்து அதை சரி செய்ய முடியும்.

மேலும் தோலுக்கு அடியில் உருவாகும் கொழுப்பு அடுக்கு காரணமாக முகம் கழுத்துக்கு இடையே ஒரு மடிப்பு விழுகலாம். இது ஏற்படுவதற்கு காரணம் மரபியல் என்று கூறி மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மேலும் தளர்வான சருமம் இருப்பதின் காரணத்தாலும் உங்களுக்கு இது போன்று நிலை ஏற்படும்.

கழுத்தில் தொங்கும் சதையை சரி செய்யக்கூடிய முறைகள்

கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையை குறைக்க பெளட் போஸ் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த பயிற்சியை நீங்கள் மூன்று வினாடிகள் வரை செய்ய முடியும். இதை செய்வதின் மூலம் உங்கள் தாடையில் இருக்கக்கூடிய தசைகள் அனைத்தும் வலிமையாக மாறும்.

விசில் போஸ் அடிப்பதின் மூலமும் உங்களது தளர்ந்த கழுத்துப்பகுதி நன்கு இறுக்கமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த விசில் போஸ் நீங்கள் செய்வதற்கு தாடையை வானத்தை நோக்கி உயர்த்தி விசிலடிக்கும் இந்த பயிற்சியை நீங்கள் செய்யும்போது உதடுகள் இறுக்கமாகும்.

 

ஏதாவது ஒரு பாடலை நீங்கள் முணுமுணுத்த படி இந்த பயிற்சியை செய்ய நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் விரைவில் கிடைக்கும். குறைந்தது பத்து முறை இந்த மாதிரி நீங்கள் செய்யுங்கள் மூலம் உங்களுக்கு முகத்தில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் இதனை மேற்கொள்வதின் மூலம் உங்கள் கன்னத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதன் மூலம் தசையானது கழுத்துக்கு கீழ் தொங்குவது தடைப்படும்.

 x மற்றும் o என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்ல வேண்டும். இப்படி சொல்லும் போது உங்கள் தாடைகள் மற்றும் கண்ணம் நகரும் வகையில் அழுத்தம் கொடுத்து உச்சரிப்பதால் இந்த சதையை நீங்கள் மிக எளிதாக குறைக்கலாம்.

 

உங்கள் நாக்கை நீட்டில் இரு பக்கமும் மாறி மாறி நிற்கவும் இந்த பயிற்சியை 15 வினாடிகள் வரை நீங்கள் தொடர்ந்து செய்தால் தளர்வாக இருக்கும் திசுக்கள் இறுக்கமாக மாறும்.

 முத்தமிடும் போஸ் போல உங்கள் முகத்தை வைத்துக் கொண்டால் நிச்சயம் கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறையும். நிதானமாக ஒரு இடத்தில் உட்கார்ந்து வானம் அல்லது கூரையை நோக்கி தலையை சாய்த்து முத்தமிடுவது போல உங்கள் உதடுகளை வைத்து முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் ரிசல்ட் கிடைக்கும்.

 பலூன் புன்னகையைப் போல இறுக்கமாக மூடியவாறு நீங்கள் புன்னகை செய்வதின் மூலம் உங்கள் வாய் திறக்காமல் இருக்கக்கூடிய நிலையில் கழுத்துப் பகுதியில் உள்ள திசுக்களை  வலிமைப்படுத்தலாம் இதன் மூலம் சதை குறையும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …