“வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் முட்டை ..!” – வைக்க வேண்டிய இடம் பற்றி தெரியுமா?

இன்று நாகரீகமான காலத்தில், கணினி யுகத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு அடிப்படை பொருளாக அனைவரது வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய பொருளாக இந்த   குளிர்சாதன பெட்டி மாறிவிட்டது.

அப்படிப்பட்ட இந்த குளிர்சாதன பெட்டியில் இந்த பொருளை வைக்கலாம். இந்த பொருளை வைக்கக்கூடாது என்பது போல் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதை சரியான முறையில் நாம் பின்பற்றுவதின் மூலம் குளிர்சாதன பெட்டியின் ஆயுளையும் நாம் வைக்கும் பொருளின் தரத்தையும் நம்மால் பாதுகாக்க முடியும்.

egg

அந்த வரிசையில் வீட்டில் இருக்கக்கூடிய குளிர்சாதன பெட்டியில் முட்டையை நாம் குளிர்சாதன பெட்டி கதவுகளின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் ரேக்கில் வைக்கிறோம்.

ஆனால் அப்படி முட்டையை கதவு இருக்கும் பகுதியில் வைப்பது தவறு என்றும் முட்டையை நடு அலமாரி பகுதியில் வைப்பது தான் சிறந்தது என்று கூறி இருக்கிறார்கள்.

egg

இதற்குக் காரணம் முட்டைகளை குளிர்சாதன பெட்டியின் கதவு பகுதியில் வைப்பது மூலம் வெப்பநிலை மற்றும் குளிர் நிலை இரண்டுக்கும் இடையே அது இருப்பதால் விரைவில் கெட்டுப் போய்விடும் . எனவே குளிர்சாதன பெட்டியின் உள்பகுதியில் சேமிக்கும் போது அது எளிதில் கெட்டுப் போகாது.

egg

எனவே இனிமேல் முட்டைகளை சேமிக்கும் போது அவற்றை குளிர்சாதனப் பெட்டியின் கதவு பக்கத்தில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் ரேக்குகளில் சேமிக்காமல் உள்ளிருக்கும் பகுதியில் சேமிப்பதின் மூலம் முட்டையின் அசல் தன்மை அப்படியே இருக்கும்.

மேலும் முட்டைகளை நான்கு டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்ப நிலையில் சேமிப்பது அவசியம். முட்டையை வாங்கி மூன்று வாரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்கு மேல் வைத்து பயன்படுத்துவது அவ்வளவு உசிதமானது அல்ல.

egg

எனவே மேற்கூறிய கருத்துக்களை உணர்ந்து கொண்டு இனிமேல் முட்டையை நீங்கள் வைக்கும் போது உள் பகுதியில் வைத்து விடுங்கள். இதன் மூலம்  முட்டையை கெட்டுப் போகாமல் நீங்கள் பாதுகாப்பாக சமைத்து சாப்பிட முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …