“அரிசி, பருப்பில் இருக்கும் பூச்சி, புழு, செல்..! – விரட்ட சூப்பர் ஐடியா..!

சமையலுக்காக நாம் வாங்கி வைத்திருக்கும் தானியங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை நாம் தக்க பாத்திரங்களில் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதில் சில சமயங்களில் எளிதில் வண்டு, பூச்சி, செல் போன்றவை வந்து விடுகிறது.

மேலும் எறும்புகளில் இருந்து அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு நாம் பல முறைகளை கையாண்டாலும் இந்த அரிசி, பருப்பில் வண்டு, பூச்சி, செல் போன்றவை ஒரு மாதம் கழித்து விட்டாலே வந்துவிடும்.

rice bug

அப்படி உணவு பண்டங்களில் பூச்சி, வண்டு, செல் போன்றவை வந்துவிட்டால் அதை எளிதில் எவ்வாறு சுத்தப்படுத்துவது என்பதை பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசி டப்பாவில் வண்டு விழுந்து விட்டால் செல் அதிகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் அவற்றில் அரை ஸ்பூன் அளவு மிளகாய் தூளை கொட்டி கலந்து விடுங்கள்.

rice bug

பிறகு அந்த டப்பாவை திறந்து வைத்தால் அது இருக்கும் வண்டு, செல் மற்றும் பூச்சிகள் அனைத்தும் வெளியே வரும் அந்த சமயத்தில் நீங்கள் டப்பா மூடியில் சிறிதளவு எண்ணெயை தேய்த்து விட்டால் அப்படியே மூடிவிட்டால் பூச்சிகள் அனைத்தும் அந்த எண்ணெயில் ஒட்டிக்கொண்டு செத்துவிடும்.

இதனை அடுத்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் அந்த மூடியை எடுத்து மட்டும் சுத்தம் செய்தால் போதும் உங்கள் அரிசி பருப்பில் இருந்த வண்டுகள், செல்,புழு போன்றவை இறந்து முடியில் ஓட்டியிருக்கும்.

rice bug

மேலும் பலரது வீட்டில் அரிசியை இது போல பூச்சி விழுந்துவிட்டால் வெயிலில் எடுத்து வைப்பார்கள். ஆனால் அது போல வெயிலில் வைப்பதால் அரிசி பொடிந்து சுவை இழந்து விடும். எனவே இனிமேல் உங்கள் வீட்டில் அரிசியில் இது போல புழு, பூச்சி ஏற்பட்டாலோ அல்லது பருப்பில் இது போல ஏற்பட்டாலும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

எனவே வெயிலில் அரிசி பருப்புகளை இது போல புழுக்கள் ஏற்பட்டால் வைப்பதை தவிர்த்து விடுங்கள். இந்த முறையை பயன்படுத்தி இனி அவற்றை நீக்க முயற்சி செய்யுங்கள் கட்டாயம் அது சிறப்பாகவே இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …