தொடை முழுதும்.. எண்ணெய் ஊற்றி மொழுகி.. இளசுகளின் BP-யை எகிற வைத்த ஹுமா குரேஷி..!

ஹூமா குரேஷி ( Huma Qureshi ) அழகான முகம், சிவந்த நிறம், கம்பீரமான உடல் தோற்றம் கொண்ட நடிகை. இவர் தமிழில் நடித்தது சில படங்கள்தான். ஆனால், ரசிகர்கள் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில், ஹூமா குரேஷி தனியார் அமைப்பைச் சேர்ந்த என்ஆர்ஐ அமைப்பாளராக, தாராவியை மேம்படுத்துவதற்காக வந்திருப்பார்.

அவர் வந்த பின்தான், அது காலா என்கிற கரிகாலனின் ரஜினிகாந்த் தின் முன்னாள் காதலி செரினா என்பது தெரிய வரும். ரஜினியுடன் முன்னாள் காதலியாக பேசும் காட்சியிலும், அதுவே, தாராவியை மேம்படுத்தும் திட்டத்தை ரஜினி எதிர்க்கும் காட்சியிலும் அவருடன் ஹூமா குரேஷி வாக்குவாதம் செய்வார். அந்த படத்தில், இவரது நடிப்பு பேசப்பட்டது. ரசிகர்களாலும், இவர் கவனித்து ரசிக்கப்பட்டார்.

Huma Qureshi

அதே போல் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமாருடன் வலிமை படத்தில், ஹூமா குரேசி நடித்திருந்தார். அந்த படத்தில், வில்லன் ஆட்களுடன் ஆக்ஷன் ஹீரோயினாக சண்டை செய்திருப்பார். இப்படி இரண்டு படங்களிலும், தனது நடிப்பால், ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் இவர்.டெல்லியைச் சேர்ந்த ஹூமா குரேசி, படித்து, பட்டம் பெற்றது டெல்லியில்தான்.

மாடலிங் துறையில் இருந்ததால், பல விளம்பர படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதே போல், மும்பையில் சாம்சங் போன் விளம்பர படங்களில் நடிக்க வந்த இவரை பார்த்து, இயக்குநர் அனுராக் காஷ்யப் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படித்தான், சினிமா உலகுக்குள் வந்தவர் குரேஷி.

Huma Qureshi

நடிக்க வருவதற்கு முன்பே, விளம்பர படங்களில் நடித்தது மட்டுமின்றி குரேஷி, நாடக நடிகையாகவும் இருந்திருக்கிறார். அதனால், திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு வெகு எளிதாக இருந்திருக்கிறது.

இதனால், மற்ற நடிகைகள் நடிக்க சிரமப்படும் சில காட்சிகளில் இவரால் வெகு இயல்பாக நடிக்க முடிந்திருக்கிறது. இதனால், இந்தியில் அடுத்தடுத்து இந்தியில் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது.

எனினும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் குரேஷி. இதனால், சிறந்த நடிப்புக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் புதுடில்லி பல்கலை கழகத்தில், வரலாற்று ஆங்கில பிரிவில் பட்டம் பெற்றவர்.

Huma Qureshi

குரேஷியின் முதல் படம், இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆப் வாசேப்பூர். இந்த படத்தில், துணை நடிகையாக தான் குரேஷி நடித்திருந்தார். எனினும், இவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது.ரசிகர்கள் மத்திியில், நல்ல வரவேற்பை பெற்றார். சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பிறகு சில காதல் படங்களில் நடித்தவர், 2013ல் சார்ட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின், முக்கிய நாயகி நடிகையாக முன்னேறினார்.

Huma Qureshi

குடும்ப பின்னணியை பொருத்தவரை குரேஷியின் தந்தை உணவகம் நடத்துகிறார். தாய் இல்லத்தரசியாக உள்ளார். குரேஷிக்கு 3 சகோதர்கள் உள்ளனர். அதில் ஒருவர் சகில் சலீம் நடிகராக உள்ளார்.

தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ஹூமா குரேஷி, ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர். காலா படத்தில், செரினா என்ற அவரது கேரக்டர், அனைவருக்கும் பிடித்தமானது.

Huma Qureshi

சமூகவலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஹூமா குரேஷி, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோக்களை, அப்டேட் செய்கிறார். அந்த வகையில், இந்த புகைப்படங்கள், கிளாமரில் ரசிகர்களை கிளுகிளுப்படையச் செய்கிறது.

மடல் வாழை தொடைகள் பளீரென தெரியும் வகையில், அவர் அணிந்திருக்கும் மாடர்ன் கிளாமர் டிரஸ் ரசிகர்களை பித்து பிடிக்கச் செய்திருக்கிறது. இந்த படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …