மொரட்டு கட்ட.. டூ பீஸ் நீச்சல் உடையில் கபாலி ஹீரோயின் ஹுமா குரேஷி..! – வைரல் போட்டோஸ்..!

டெல்லியைச் சேர்ந்தவர் ஹூமா குரேசி.(Huma Qureshi) மாடலிங் துறையில் இருந்ததால், பல விளம்பர படங்களில் நடித்தார். அதே போல், மும்பையில் சாம்சங் போன் விளம்பர படங்களில் நடிக்க வந்த இவரை பார்த்து, இயக்குநர் அனுராக் காஷ்யப் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படித்தான், சினிமா உலகுக்குள் வந்தார் குரேஷி.

நடிக்க வருவதற்கு முன்பே, விளம்பர படங்களில் நடித்தது மட்டுமின்றி குரேஷி, நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அதனால், திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு வெகு எளிதாக இருக்கிறது.

இதனால், மற்ற நடிகைகள் நடிக்க சிரமப்படும் சில காட்சிகளில் இவரால் வெகு இயல்பாக நடிக்க முடிகிறது. இதனால், இந்தியில் அடுத்தடுத்து இந்தியில் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது.

Huma Qureshi

எனினும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் குரேஷி. இதனால், சிறந்த நடிப்புக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புதுடில்லி பல்கலை கழகத்தில், வரலாற்று ஆங்கில பிரிவில் பட்டம் பெற்றவர்.ஹூமா குரேஷி, வலிமை படத்தில், அஜித் உடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். காலா படத்தில் ரஜினியின் மாஜி காதலியாக நடித்திருப்பார்.

Huma Qureshi

பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில், ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ஈஸ்வரி ராவ். ஆனால், முன்னாள் காதலி கேரக்டரில், ஹூமா குரேஷி நடித்திருந்தார்.குரேஷியின் முதல் படம், இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆப் வாசேப்பூர்.

இந்த படத்தில், துணை நடிகையாக தான் குரேஷி நடித்திருந்தார். எனினும், இவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது.ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றார். சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Huma Qureshi

பிறகு சில காதல் படங்களில் நடித்தவர், 2013ல் சார்ட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின், முக்கிய நாயகி நடிகையாக முன்னேறினார்.
ஹூமா குரேஷியின் குடும்ப பின்னணியை பொருத்தவரை குரேஷியின் தந்தை உணவகம் நடத்துகிறார். தாய் இல்லத்தரசியாக உள்ளார். குரேஷிக்கு 3 சகோதர்கள் உள்ளனர். அதில் ஒருவர் சகில் சலீம் நடிகராக உள்ளார்.

Huma Qureshi

தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ஹூமா குரேஷி, ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர். காலா படத்தில், செரினா என்ற அவரது கேரக்டர், அனைவருக்கும் பிடித்தமானது.சில நடிகைகள் அழகாக மட்டுமல்ல, கம்பீரமான தோற்றத்திலும் இருந்து விடுகின்றனர். அதில் ஒருவர்தான் ஹூமா குரேஷி. தமிழ் படங்களில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் எனத் தோன்றுகிறது.

Huma Qureshi

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் குரேஷி, அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் படங்களை அப்டேட் செய்கிறார். அந்த வகையில், நீச்சல் உடையில் இந்த படங்களை எடுத்து பதிவிட்டு இருக்கிறார். பார்த்தவுடன், ரசிக்கத் தோன்றுவதால், லைக்குகள் குவிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *