இதனால் தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. அஜித் பட நடிகை உருட்டிய உருட்டு..!

பிரபல நடிகை ஹீமா குரேஷி ( Huma Qureshi ) இதனால் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.

Huma Qureshi

அதன் பிறகு பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் மாடல் அழகியான இவர் ஹிந்தி மராத்தி ஆங்கிலம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

Huma Qureshi

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது காதலியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஆக்சன் கதாநாயகியாக நடித்த அதிர வைத்திருந்தார்.

ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் நாயகனுடன் சேர்ந்து சண்டை செய்யும் ஹீரோயினாக கலக்கியிருந்தார் நடிகை ஹுமா குரேஷி.

Huma Qureshi

தொடர்ந்து ஹிந்தி தமிழ் தெலுங்கு மராத்தி உள்ளிட்ட மொழிபடங்களில் நடித்து வரும் இவர் திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நிச்சயமாக நான் எனக்கு சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அது போன்ற நபரை சந்தித்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

Huma Qureshi

நானும் திருமணம் செய்து கொண்டாலும் திருமண சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ள எனக்கு தற்போதைக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடையாது.

எனக்கு இப்போதாய்க்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறதோ..? அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இவர் ஏற்கனவே முடாசர் அசிஸ் என்பவரை காதலித்து அவரை பிரேக் அப் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Huma Qureshi

ஆனால், இதுவரை யாரையும் காதலிக்கவில்லை சரியான நபருக்காக காத்திருக்கிறேன் என்று நடிகை ஹுமா குரேஷிற்கு கூறியிருப்பதை கேட்ட பாலிவுட் ரசிகர்கள் நீங்க நல்லா உருட்டுங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …