ஹைட்ரோபோனிக் முறையா? அது என்ன என்று பார்க்கலாமா?

போன் பூத்துகள் இன்று கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதுபோலத்தான் விவசாயத்திலும் ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி விளைச்சல்களை எடுக்கிறார்கள்.

 அட அந்த ஹைட்ரோபோனிக் முறை என்றால் என்ன என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஹைட்ரோபோனிக் முறை

இந்த ஹைட்ரோபோனிக் முறையின் மூலம் காய்கறி விதைகளை பிளாஸ்டிக் கூடைகள் அல்லது தேங்காய் பட்டைகளில் வைத்து வளர்க்க வளர்க்கிறோம். இங்கு மண் என்பதே இல்லாமல் நீரைக் கொண்டு விவசாயத்தை மேற்கொள்வதால்தான் இதை ஹைட்ரோபோனிக் முறை என்று நாம் கூறுகிறோம்.

இந்த மண்ணில்லா விவசாயத்தில் மூன்று முதல் நான்கு வாரங்களில் காய்கறிகள் நமக்கு கிடைக்க ஆரம்பிக்கும்.நம் நாட்டை பொறுத்தவரை இந்த முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த ஹைட்ரோபோனிக் முறையானது மிகவும் பிரபலம் அடைந்து உள்ளது.

உங்கள் வீட்டிலேயே நீங்கள் மண்ணில்லாத விவசாயத்தை செய்ய முடியும். இதற்கு தண்ணீர் மட்டும் போதுமானது. இந்த விவசாயத்தில் நீங்கள் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம் போன்ற பல காய்கறிகளை வளர்க்கலாம். நீருக்குள் இவை வளர்கிறது. மேலும் இதற்கு தண்ணீரும் குறைந்த அளவே தேவை.

ஆரம்ப காலத்தில் நீங்கள் இந்த விவசாயத்தை செய்வதற்கு தண்ணீர் குழாய்கள் அமைப்பதற்கான செலவு ஆகும். அதன் பிறகு நீங்கள் விளைவிக்க செய்யப்படும் செலவு குறைவுதான். பூஜைகளிடமிருந்து எந்த காய்கறி செடிகளை பாதுகாக்க பாலிதீன் கவர்களை பயன்படுத்தலாம்.

மேலும் அணில் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து பாதுகாக்க நீங்கள் பயிரிட்டு இருக்கும் இடத்தை சுற்றி வலை அமைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உங்கள் மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு பெறுவது போல பெற முடியும். நஞ்சில்லா இந்த விவசாயத்தை நீங்கள் செய்ய சிறிய அளவு முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …