என்னை விட 30 வயசு அதிகமான ஹீரோ.. அட்ஜெஸ்ட் பண்ணேன்.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய ரம்யா கிருஷ்ணன்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் .

இவருக்கு வயது 53 வயதாகியும் இவரது மார்க்கெட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தனது கச்சிதமான நடிப்பையும் மிகச் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஸ்தம்பிக்க செய்து விடுவார்.

குறிப்பாக அவருடன் நடிக்கும் நடிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அபாரவிதமாக இருக்கும் .

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

இவர் 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்து பின்னர் 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் இன்று வரை காலம் கடந்தாலும் யாராலும் மறக்கவே முடியாது.

அந்த அளவுக்கு அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே செம டஃப் கொடுத்து நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த்தே ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து மிரண்டு போனதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார்.

சிறந்த நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் .

சிறந்த நடிகைக்கான விருதுகள்:

இதுவரை 4 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், 3 நந்தி விருதுகள் , தமிழக அரசு திரைப்பட விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை தனது சிறப்பான நடிப்புக்காக பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் சிறந்த நடிகை, ஹீரோயின் ,குணச்சித்திர ,நடிகை நகைச்சுவை நடிகை இப்படி பல முன்னணி வேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார் .

இதனிடையே பிரபல தெலுங்கு இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் .

நடிகை ரம்யா கிருஷ்ணன் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மிக பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதா சிவகாமி தேவியாக நடித்து ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன்:

இந்த படத்தில் அவரது நடிப்பு வார்த்தைகளால் சொல்லி புகழவே முடியாது. அந்த அளவுக்கு அவ்வளவு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனை அவரை தவிர அந்த கேரக்டருக்கு யாராலும் சிறப்பாக நடித்திருக்கவே முடியாது என அடித்து கூறும் அளவுக்கு தனது அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் சினிமாவில் மிகவும் நெருடலான சம்பத்தை கூறியிருக்கிறார்.

அதாவது, நான் சினிமாவில் அறிமுகமானபோது என்னை விட 20 வயது 30 வயது அதிகமான ஹீரோக்களுக்கு ஜோடியாகும் நிலை ஏற்பட்டது .

ஆரம்பத்தில் இது எனக்கு ஒரு நெருடலான விஷயமாக தோன்றியது. அதே சமயம் அப்படிப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கிறார்கள்.

வயதில் மூத்தவர்களுடன் அட்ஜெஸ்ட்:

தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுகிறோம் என்று எண்ணி அந்த படங்களில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு நடித்தேன் .

ஒரு கட்டத்தில் தான் எனக்கு உண்மை தெரிய வந்தது. சினிமாவில் வயசு வித்தியாசம் ஒரு விஷயமே கிடையாது .

அந்த கதைக்குள் கதாபாத்திரத்திற்குள் நாம் ஒன்றிவிட்டபோது என்னைவிட 30 வயது அதிகமான நடிகருக்கு நான் ஜோடியாக நடிக்கும் பொழுது அவருடைய மகன் தான் என்னுடைய மகன் அவருக்கு யார் அப்பாவாக நடிக்கிறாரோ அவர் எனக்கு மாமனார் .

இப்படியான ஒரு சூழ்நிலைக்குள் நாம் வந்து விடுகிறோம். அதை திரையில் பார்க்கும் போதும் சரியாக பொருந்தி இருக்கிறது .

பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. அதன் பிறகு தான் சினிமாவில் வயது வித்தியாசம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன் .

இருந்தாலும் இதை புரிந்து கொள்ள எனக்கு சில ஆண்டுகள் ஆனது எனவும் பேசி இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ரம்யா கிருஷ்ணனின் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இப்படியான சிக்கல்களை கூட சந்தித்திருக்கிறாரா? என்பதை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகிக் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version