50 வயசு.. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. இது தான் காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சித்தாரா..!

திரைப்படங்களில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட் பிடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய பல நடிகைகள் வயசாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தை கூறி வந்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நடிகை சித்தாரா:

அந்த வகையில் திருமணம் செய்யாமலே வயதான நடிகைகள் லிஸ்டில் அனுஷ்கா செட்டி, கிரண் ரத்தோட், தபு ,பூனம் பஜ்வா, நக்மா ,கோவை சரளா இப்படி பல நடிகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சித்தாரா கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை சித்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக தென்பட்டு வரும் சித்தாரா முதன்முதலில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

படையப்பா சித்தாரா:

அதை எடுத்து இவருக்கு படையப்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினியின் தங்கையாக இவர் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை 60க்கும் படங்களில் பல படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

2000 கால கட்டத்தில் படையப்பா, முகவரி, திருநெல்வேலி, மத்தாப்பூ , பூஜை ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தை தாண்டி தொலைக்காட்சி தொடர்களிலும் பராசக்தி, செந்தூரம் என சில தொடர்களில் நடித்திருக்கிறார்.

50 வயசாகியும் திருமணம் பண்ணல:

தற்போது 50 வயதை நெருங்கி விட்ட நிலையிலும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாகவே இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் நடிகை சித்தாரா பேசியதாவது, நான் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோதே ஒருவரை காதலித்தேன்.

ஆனால் அந்த காதல் துரதிஷ்டவசமாக கைக்கூடவில்லை. அவரது நினைப்பிலேயே இருந்ததால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வரவே இல்லை.

அதனால் என்னுடைய வாழ்வின் துவக்கத்திலேயே நான் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவு எடுத்துவிட்டேன்.

அந்த முடிவில் இப்போது வரை அப்படியே இருந்து வருகிறேன் என சித்தாரா கூறி இருக்கிறார். பல்வேறு வெற்றி படங்களில் நடித்த குணச்சித்திர நடிகையாக பிரபலமான அழகு நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா? என ரசிகர்கள் வேதனையுடன் கருத்து தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version