நான் அடல்ட்.. எனக்கு அந்த பிரச்சனை இல்ல.. ஆனா குழந்தைகளுக்கு.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட மாளவிகா..!

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக விளங்கியவர். இதனை அடுத்த தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகைகளோடு நடித்திருக்கிறார். தமிழை பொறுத்த வரை சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி திரைப்படத்தில் அஜித் குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து அறிமுகமானார்.

நான் அடல்ட்.. அந்த பிரச்சனை இல்ல..

நடிகை மாளவிகா எதிர்பார்த்த அளவு தமிழ் திரைப்படங்கள் இவருக்கு கிடைக்காததை அடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க சென்ற இவர் 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் என்ற திரைப்படத்தில் நடனமாடி தமிழ் திரை உலகிற்கு ரீ என்றி கொடுத்தார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலஹாசன் உடன் நடித்த இவர் ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் சி யூ எட் 9 படத்தின் நடித்த இவர் அடுத்தடுத்து வாய்ப்பு வரும் என்ற காத்திருந்தும் இவரது கனவு நினைவாகவில்லை.

மேலும் இவர் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற திரை பாடலுக்கு அற்புதமாக நடனமாடி அனைவரையும் கவர்ந்து இருப்பவர். திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து 2007 – ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

ஆனா குழந்தைகளுக்கு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை மாளவிகா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைப்பதோடு மட்டுமல்லாமல் பல தனியார் youtube சேனல்களுக்கு பேட்டிகளையும் அளித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து விடுவார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது தொகுப்பாளினி கேட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு நேர்த்தியான முறையில் பதிலை அளித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

அந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்வியில் ஒரு தாயாக எந்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளிடம் strict ஆக இருப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒரு நடிகையாக இருக்கக்கூடிய இவர் அளித்த பதில் தான் அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளியது.

இதற்கு காரணம் ஒரு சாமானிய தாயாக இருந்து வெளியே செல்லக்கூடிய விஷயமான தன் குழந்தைகள் குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குள் வந்து விட வேண்டும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.

இதனை அடுத்து தொகுப்பாளினி இதை அம்மாவாக இருந்து நீங்கள் செய்திருக்கிறீர்களா? என்று கேட்க சிரித்த படியே அதற்கு உரிய பதிலையும் அழகாக தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித்த மாளவிகா நான் அப்படி நேரத்திற்கு வீட்டிற்கு வந்ததில்லை என்று சொன்னார். இதைத் தொடர்ந்து தொகுப்பாளினி இந்த விஷயம் எனக்கு முன்னதாகவே தெரியும். இதைப்பற்றி உங்கள் கணவரிடம் கேட்டு தெரிந்து வைத்திருக்கிறேன் என்று கூறி அசத்தினார்.

கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட மாளவிகா..!

இதற்கு தகுந்த பதிலை தந்த மாளவிகா தான் ஓர் அடல்ட் என்றும் அதனால் நேரம் கழித்து வருவது தவறு கிடையாது.

அதே நேரம் எனது குழந்தைகள் அடல்ட் அல்ல என்பதால் தான் நான் குறித்த நேரத்திற்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்பதை விரும்புவதாக சொல்லி இருக்கிறார்.

இந்த பதிலை கேட்ட தொகுப்பாளினி அது சரி அப்ப நீங்க வீட்டை விட்டு வெளியே போனால் எத்தனை மணிக்கு திரும்பி வருவீர்கள் என்று திரும்ப கேட்க அது பற்றி எல்லாம் நீங்கள் கேட்க வேண்டாம் என்று சிரித்து மழுப்பி பதிலளித்தார்.

மேலும் தொகுப்பாளினி சரி இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால் இந்த கேள்வியை ஸ்கிப் செய்து விடுவோம் ஓகே பைன் சூப்பர் என்று சொல்லிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version