என் ஆம்பள வெர்ஷன்.. என்னால அது இல்லாம இருக்கவே முடியாது.. நடிகை நீபா ஓப்பன் டாக்..!

தற்போது சீரியல் நடிகைகளுக்கும் திரைப்பட நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் கிடைத்திருக்க கூடிய ஆதரவு சமமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான நீபா பார்ப்பதற்கு பழக்கப்பட்டவர் போல தோற்றத்தில் காட்சி அளிப்பார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு நடன ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.

நடிகை நீபா..

நடிகை நீபா ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதை அடுத்து இவருக்கு சின்னத்திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கவிதாஞ்சலி  என்ற சீரியலில் இவர் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் நடிப்பில் வெளி வந்த காவலன் திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவர்.

இதனை அடுத்து மக்கள் மத்தியில் மிக நன்றாக இந்த படம் ரிலீசானதை அடுத்து பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்ளிட்ட படங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

என் ஆம்பள வெர்ஷன்..

என்ன தான் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சீரியல்களில் மூலம் தான் அனைவரும் மனதிலும் இடம் பிடித்த இவர் அண்மை பேட்டி ஒன்று சில விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கு காரணம் ஷூட்டிங்கில் தனக்கு மட்டும் பிரேக் தராமல் ஷூட் நடக்கும்.மேலும் என்னால் தொடர்ந்து பேசாமல் எல்லாம் இருக்க முடியாது. ஒரு சின்ன கேள்வியை கேட்டால் கூட அதற்கு ஒரு பெரிய பதிலை தரக்கூடிய கேரக்டர் என்னுடையது என்பதை சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து இவரோடு தம்பி யாக நடித்தவர் பற்றி சொல்லும் போது என்னுடைய ஆம்பள வெர்ஷன் இவன் என்பதை நான் உறுதி செய்யக் கொண்டேன். ஏனென்றால் என்னை போலவே அவனும் தொணத்தொணவென்று பேசிய படியே இருப்பான் என்று சொல்லி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

என்னால அது இல்லாம இருக்க முடியாது..

மேலும் அந்த சீரியலில் எங்களை எப்படி கரெக்டாக அக்கா, தம்பியாக செலக்ட் பண்ணினார்கள் என்று தெரியவில்லை. எனினும் எங்களுக்குள் அந்த ரிலேஷன்ஷிப் பாண்ட் ஆனது மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை நேர்த்தியாக தெரிவித்து இருக்கிறார்.

தன் வீட்டில் தன் சொந்த தம்பியோடு எப்படி இருப்பாரோ அது போலத் தான் அவரோடும் இருந்ததாக பேசி இருக்கும் நடிகை நீபா அதனை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியிருக்கும் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்கள் இதனை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக இது மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version