ஒரு சில நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் எடுத்து எடுப்பிலேயே அதிர்ஷ்டம் அடித்து விடும் என்பதற்கு உதாரணமான நடிகையாக இருந்து வருபவ தான் நடிகை சம்யுக்தா மேனன்.
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் பாலக்காட்டில் வசித்து வருகிறார். இவர் மலையாள திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை சம்யுக்தா மேனன்:
அதன் பிறகு நடிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
முதல் முதலாக கடந்த 2015ல் வெளிவந்த பாப்கார்ன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரைத்துறையில் தடம் பதித்தார்.
அதன் பிறகு தமிழில் களரி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படம் மிகப்பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும் அவர் இரண்டாவது படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது.
ஆம் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அவர் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
வாத்தி படம் கொடுத்த அடையாளம்:
இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் நடிகை சம்யுக்தா மேனன்.
தொடர்ந்து அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்து பிஸியான நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
அப்போது மலையாள சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாள சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் இடையே இருக்கும் ஒரு வித்தியாசத்தை பற்றி கூறி அதிரவைத்துள்ளார்.
அதாவது, பெரும்பாலும் மலையாள சினிமாக்களில் மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். சிறந்த நடிப்பை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள் .
எதார்த்தமான நடிப்பையும் நேச்சுரலான முகத்தையும் வைத்துக்கொண்டு தான் அவர்கள் நடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
நானும் அப்படித்தான் பழகி வந்தேன். ஆனால் தெலுங்கு சினிமாவை பொருத்தவரை அப்படி கிடையவே கிடையாது.
தெலுங்கு படங்களில் அந்த டார்ச்சர்:
அவர்களுக்கு முக்கியமானது மேக்கப் மட்டும் தான். நான் ஷாட்டுக்கு தயாராகி டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு வந்து நின்று கொண்டிருக்கும்போது திடீரென காஸ்டியூமர் என அழைத்து சேலை சரியாக இல்லை அதை சரிப்படுத்துங்கள் என கூறி சரி செய்தார்.
உடனே என்னுடைய கவனமெல்லாம் சிதறி முழுக்க முழுக்க சேலை சரிசெய்வதில் சென்று விட்டது. அந்த சமயத்தில் என்னால் டயலாக் மனப்பாடம் செய்து நடிக்க முடியாமல் போனது.
இதை நான் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் இந்த விஷயம் எனக்கு எளிதானதாக தெரியவில்லை.
இதனால் தெலுங்கு சினிமாவில் நடிக்கவே எனக்கு சவுகரியமாக இல்லை என வெளிப்படையாக கூறுகிறார் சம்யுக்தா மேனன்.
சம்யுக்தாவின் இந்த பேட்டி தெலுங்கு சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் இடையே பிரச்சனை மூட்டிவிடுவது போல் இருப்பதாக கூறத்துவங்கிவிட்டனர்.
இதன் மூலம் அவருக்கு தெலுங்கு சினிமாவில் இனி வாய்ப்புகள் கிடைப்பதே அரிதாகிவிடும் என நெட்டிசன்கள் கூற தொடங்கி இருக்கிறார்கள்.
அவரது கருத்தை வெளிப்படையாக கூறியிருப்பதால் தெலுங்கு சினிமாவால் அவர் வெறுக்கப்படும் நடிகையாக இனிமேல் பார்க்கப்படுவார் என சினிமா செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது.