இந்த மாதிரி கேள்வி எனக்கு வந்ததில்ல.. இதுல நான் கொஞ்சம் வீக்.. நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஹீரோயினாக பார்க்கப்படுபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இங்க நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

கீர்த்தி சுரேஷ்:

இவர் நடிகை ஆவதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாய் மேனகா சுரேஷ் மற்றும் இவரது பாட்டி சரோஜா உள்ளிட்டோர் திரைப்படத்துறையில் நடிகைகளாக இருந்தனர்.

அவர்களின் மூலமாகத்தான் கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

முதல் படம் ஓரளவுக்கு அவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

அடுத்தடுத்த வெற்றி படங்கள்:

இதை அடுத்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 சண்டக்கோழி, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து நடித்து நட்சத்திர ஹீரோயின் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இதற்கு முன்னதாக தெலுங்கில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி ரோலில் நடித்தார்.

அந்த படத்தில் சிறந்த நடிகைப் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அதை எடுத்து கீர்த்தி சுரேஷ் ரேஞ்சே வேற லெவலுக்கு மாறிவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின் ஆக இடத்தை பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு தற்போது 31 வயதாகிறது. அவ்வப்போது இவர் காதல் கிசுகிசுக்களிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

முன்னதாக விஜய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அனிருத் மற்றும் துபாயில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவர் உள்ளிட்டோருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

நான் கொஞ்சம் வீக்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட கீர்த்தி சுரேஷிடம் தொகுப்பாளினி கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை “காதல் என்றால் என்ன? என கேட்டதற்கு… நான் காதல் விஷயங்களில் ரொம்ப வீக்கா இருக்கேன்.

இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் வந்தது இல்லை. என்கிட்ட யாரும் இப்படி கேட்டதில்லை என்றார்.

உடனே தொகுப்பாளர்…. நீங்க படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் ரொம்ப சூப்பரா நடிக்கிறீங்களே என கூறினார்.

உடனே கீர்த்தி நான் படங்களில் மட்டும் தான் ரொமான்டிக் கீர்த்தியா இருப்பேன் நிஜத்தில் அப்படி இல்லை. லவ்.. ரொமான்ஸ் இதிலெல்லாம் நான் ரொம்ப வீக் என கூறினார்.

ஓப்பன் டாக்:

அப்போ கீர்த்தி சுரேஷ் சிங்கிளா? என கேட்டதற்கு நான் சிங்கிளா இருக்கிறேன் என்று சொல்லவே இல்லையே என்ன ஒரு இன்ஸ் கொடுத்தார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “ரகு தாத்தா” இந்த திரைப்படம் பெண்களின் சுதந்திரத்தை பற்றி உருவாகி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அப்படத்தின் ப்ரோமோஷன்களை கீர்த்தி சுரேஷ் கலந்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version