கதை எனக்கு புடிச்சிருந்தா.. இந்த மாதிரி கூட நடிக்க நான் ரெடி.. பிரியங்கா மோகன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் பிரியங்கா அருள் மோகன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராக கொண்ட இவர் முதன் முதலில் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதை அடுத்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிரியங்கா மோகன்:

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் அதே 2019 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க அடுத்ததாக ஸ்ரீகரம் திரைப்படத்தில் நடித்து பெரும் ஹிட் கொடுத்தார்.

மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்ட பிரியங்கா மோகனுக்கு தமிழ் சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் தேடி சென்றது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

குறுகிய காலத்திலே பிரபலம்:

முதல் படமே மாபெரும் வெற்றி படமாக கோலிவுட்டில் பெரும் ஹிட் அடித்தது. இதன் மூலம் பிரியங்கா மோகன் ராசியான நடிகையாக தமிழ் சினிமாவில் இடத்தைப் பிடித்தார் .

2021 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு கிடைக்க தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோயினாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

29 வயதே ஆன இளம் நடிகையான பிரியங்கா மோகன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக லட்சணமான தோற்றத்திலேயே இருப்பார்.

தொடர்ந்து இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

தற்போது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் தொகுப்பாளினி..

இந்த மாதிரி கூட நடிக்க நான் ரெடி…

நீங்க ஒரு படத்துல மூன்று குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும் ஆனால் அந்த கேரக்டர் ரொம்ப சூப்பரா அருமையா சித்தரிச்சிருக்காங்க.

படத்திற்கு அந்த ரோல் மிக முக்கியமான ரோலாக பார்க்கப்படுகிறது. அந்த படத்தோட முழு கதையும் அந்த அம்மாவை நோக்கி நகர்கிறது என்றால் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக உங்களால் நடிக்க முடியுமா? நடிப்பீர்களா? என கேள்வி கேட்பதற்கு….

அந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தால்…அந்த ரோலுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நான் அதில் நடிப்பேன் என பிரியங்கா மோகன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அவரின் இந்த பதில் இயக்குனர்களின் கண்ணில் பட்டால் கண்டிப்பாக அடுத்த திரைப்படத்தில் பிரியங்கா மோகனை அம்மாவாக பார்க்கலாம் .

அப்படித்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தயங்காமல் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து இன்று நட்சத்திர நடிகையாக அந்தஸ்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version