நான் தமிழ் பொண்ணு தான்.. கடுப்பான நடிகை சாய் பல்லவி..!

மலர் டீச்சர் ஆக பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி.

ஒரே திரைப்படத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களை தன் வசப்படுத்தி ஈர்த்தவராக சாய் பல்லவி பார்க்கப்பட்டு வருகிறார்.

ஹீரோயினிக்கு ஏத்த எந்த பந்தாவும் காட்டாமல் மிகவும் நேச்சுரல் அழகை காட்டி மிகச் சிறந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகை சாய் பல்லவி:

நடிகை என்றால் இப்படியும் இருக்கலாம் என்பதற்கு உதாரணமாக புதுவிதமாய் வந்து தோன்றியவர்தான் நடிகை சாய் பல்லவி.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் பிரேமம்.

இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாநாயகியாக நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டதோடு அவருக்கு விருதுகளும் குவிந்தது.

குறிப்பாக மலையாள மொழியை தாண்டி தமிழ் மக்களை அதிகம் கவர்ந்தது இந்த திரைப்படம் என்று சொல்லலாம்.

ஒரே படத்தில் உலக பேமஸ்:

அதை அடுத்து தமிழ் ரசிகர்களும் சாய்பல்லவிக்கு அதிகம் கூடி விட்டார்கள். தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழில் கரு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக கடந்து 2017 அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்திற்கு முன்னதே 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக வந்து போவார் .

சிறிய ரோலாக இருந்தாலும் அது அவ்வளவாக அன்று பேசப்படாமல் போனது அதன் பிறகு இவர் நடன நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சிகளில் பங்கீடு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் இவர் நடனமாடிய பிரபலமானதால் சிறு வயதிலேயே பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ஆனால் இடையில் அவர் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால் திரைப்படத்துறை எட்டி கூட பார்க்கவில்லை.

டாக்டர் சாய்பல்லவி:

மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகி இருந்து வரும் சாய்பல்லவி திரைப்பட நடிகையாகவும் இருப்பது மிகப்பெரிய ஆச்சரிய ஆச்சரியத்திற்கு உரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

கரு, கனம் , மாரி 2, என் ஜி கே. கார்க்கி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பது குறிப்பு தக்கது.

இவரது நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், ஒட்டுமொத்த சிறுசுகள் முதல் பெருசுகள் வரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பாடல் இன்று வரை ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. க்யூட்டான நடந்ததால் அனைவரையும் கவர்ந்திழுத்த சாய் பல்லவி தமிழ் சினிமாவின் பெயர் பெட்ரா ஹீரோயின் என்ற லிஸ்டில் தொடர்ந்து இடம் பிடித்திருக்கிறார்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய்பல்லவி கன்னட பெண் என செய்திகள் வெளியாவது குறித்து கேட்டதற்கு,

தமிழ் பெண்ணே கிடையாது:

கடுங்கோபத்தோடு நான் கன்னட பெண் இல்லை…. தமிழ் பெண் தான் என கூறி விளக்கம் கொடுத்தார். அதில், என்னுடைய சொந்த ஊர் படுகா, ஊட்டி பக்கத்துல கோத்தகிரி பக்கத்துலத்தான் இருக்கு.

ஊட்டியும் தமிழ் நாட்டில் தானே இருக்கு அப்போ நான் தமிழ் பொண்ணு தான் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் நெட்டிசன் ஒருவர் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே … இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என கூறியுள்ளார்.

மேலும், படுகர் மொழியே கன்னட மொழியில் உள்ள கிளை மொழி தான் எனவே சாய்பல்லவி ஒரு கன்னடர் என அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version