பிரேம்ஜியை நம்புனேன்.. எமாத்திட்டார்.. இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல..!

50 வயதை கிட்டத்தட்ட நெருங்கியும் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜி அமரனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டது. காரணம், இவர் திருமணமே செய்து கொள்ள மாட்டார் கடைசிவரை முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பார் என கூறப்பட்டு வந்தது.

நடிகர் பிரேம்ஜி அமரன்:

அது மட்டும் இல்லாமல் அவரின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தது. முரட்டு சிங்கிள் என கூறி டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு திருமணமே வேண்டாம் என அதை எதிர்ப்பது போல பிரேம்ஜி அமரன் வெளிக்காட்டி வந்தார்.

கிட்டத்தட்ட 47 வயது வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் இனிமேல் அவர் நிச்சயம் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என எல்லோரும் பேசத் தொடங்கினார்கள் .

அதுமட்டுமில்லாமல் பல பிரபலமான நடிகைகளிடம் வழிந்து பேசுவது பிரேம்ஜி அமரனுக்கு தனி ஸ்டைல் என்று சொல்லலாம்.

இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி குணச்சித்திர நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார்.

கங்கை அமரனின் இளைய மகனான இவர் வெங்கட் பிரபுவின் சகோதரர். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரும் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

47 வயசில் திருமணம்:

குறிப்பாக இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா திரைப்படத்தில் அவருடன் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

குறிப்பாக என்ன கொடுமை சார் இது? என்று டயலாக்கும் மற்றும் எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா போன்ற வசனங்கள் பிரேம்ஜிக்கு பிரேம்ஜிக்கே உரித்தான வசனங்களாக பார்க்கப்பட்டது.

அன்றாட வாழ்க்கையில் அவ்வப்போது அந்த வசனங்களை பயன்படுத்துவார். பிரேம்ஜிக்கு மிகப்பெரிய நண்பர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

இதனிடையே யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணை. காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

பிரேம்ஜியின் இந்த திருமணம் எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தாலும் பிரேம்ஜி மிகச் சிறப்பான வாழ்க்கை வாழட்டும் என எல்லோரும் மனதார வாழ்த்தினார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்து என்ற அந்த பெண் வங்கி அலுவலராக பணியாற்றி வருகிறார். facebook இல் துவங்கிய இவர்களின் நட்பு பயணம் வாட்ஸ் அப்பில் காதலாக மாறியிருக்கிறது.

வாட்ஸ் ஆப்’ல் காதல்:

அதன் பின் இந்து தான் முதன் முதலில் பிரேம்ஜி இடம் காதலை ப்ரபோஸ் செய்திருக்கிறார் .பின்னர் இந்த காதல் வலுவடைந்து கல்யாணம் வரை சென்று இருக்கிறது.

திருத்தணி முருகன் கோவிலில் இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக நடந்தது. இத் திருமணத்தில் பிரேம்ஜியின் நண்பர்கள் ஆன ஜெய், வைபவ், அண்ணன் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தார்கள் .

இந்நிலையில் பிரபல பாடகியான. வினைதா சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, நான் ஒரு பெண்ணாக திருமணமாகாத சிங்கிள் பெண்ணாக நான் மட்டும்தான் இருந்தேன்.

பிரேம்ஜி என்னை ஏமாத்திட்டான்:

எனக்கு துணையாக பிரேம்ஜியும் , ஜெய்யும் இருந்தார்கள். பிரேம்ஜி அவ்வப்போது என்னை கலாய்த்து கொண்டிருப்பார்.

ஆனால், அவரே இப்படி திருமணம் செய்து கொண்டு சமையல் அறை வரை செல்வார் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

எப்படியும் ஜெய் திருமணம் செய்து கொள்வான். ஆனால், பிரேம்ஜிக்கலாம் வாய்ப்பே இல்லை என்று தான் நினைத்தேன்.

சொல்லப் போனால் பிரேம்ஜியின் காதலுக்கு நான் தான் ஐடியாவை கொடுத்தேன். இந்து ப்ரொபோஸ் பண்ணும் போது பிரேம்ஜி இப்படி ரிப்ளை பண்ணு.. அப்படி பேசு என்று நான் தான் ஐடியா கொடுத்தேன்.

இருந்தாலும் இதெல்லாம் சும்மாதான் இருக்கும் என்று நினைத்தேன். இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை என பாடகி வினைதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவரின் இந்த கலகலப்பான பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version