நடிப்புன்னா இது தானா… அந்த காட்சியில் நடித்த பிறகு ரொம்ப அழுதேன்.. ராஷ்மிகா வேதனை..!

கன்னட சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி இன்று இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகையாக புகழ் பெற்றிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா .

இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

நடிகை ராஷ்மிகா மந்தனா:

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா அளவில் நட்சத்திர நடிகை எந்த அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார்.

முதல் திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சில திரைப்படங்களில் கன்னட சினிமாவில் நடித்து வந்தார் .

அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குவிய துவங்கியது. இதை அடுத்து 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த “சலோ” என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படமே அங்கும் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்து விஜய் தேவர்கொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருந்தார் .

இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் காதல் கிசுகிசுக்கப் பட்டார் ராஷ்மிகா மந்தனா.

இந்தி படங்களில் ராஷ்மிகா:

ஆனால் அதை எல்லாம் அவர் காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த ரஷ்மிகாவுக்கு தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே தமிழ் சினிமாவில் கோடி கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக இருந்து வந்தார் ராஷ்மிகா மந்தனா.

அவரது க்யூட்டான அந்த எக்ஸ்பிரஷனுடன் கூடிய நடிப்புதான் அவருக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது..

ஹிந்தியில் முதன்முதலில் அமிதாபச்சன் உடன் இணைந்து Goodbye என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலே இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் உடன் நடித்ததால் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டும் அடையாளமும் கிடைத்தது.

அதையடுத்து பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக “அனிமல்” திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிக்கா மந்தனா .

ஆணாதிக்கம் நிறைந்த அனிமல்:

அந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் நிறைந்த படம் என்பதால் ராஷ்மிகா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படம் பெருவாரியான ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனாலும் கூட அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது .

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற படமாக கொண்டாட தொடங்கினார்கள். கிட்டத்தட்ட ரூ.900 கோடி வரை அந்த திரைப்படம் வசூலிட்டி அபார சாதனை படைத்திருந்தது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பை தாண்டி ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு விமர்சனத்திற்கு உள்ளானது .

இந்த திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது தான் ஆச்சரியப்படக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூருடன் இணைந்து நிறைய ரொமான்டிக் காட்சிகளில் படும் நெருக்கமாக நடித்திருந்தது பேசு பொருளாகியது.

அந்த காட்சியில் நடித்துவிட்டு அழுதேன்:

இந்நிலையில் படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா இப்படத்தில் நான் ஒரு காட்சியில் ஹீரோவான ரன்பீர் கபூரை அடிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் .

அந்த காட்சியை தன்னால் சரியாக புரிந்து கொண்டு நடிக்கவே முடியவில்லை. இந்த குறிப்பிட்ட காட்சியில் நாம் எப்படி நடிக்கப் போகிறோம்? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது படத்தின் இயக்குனர் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் ஒரு நபர் எப்படி உணர்வார் என்று எனக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர் எனக்கு புரிய ஆரம்பித்தது. அதன்பின் அந்த காட்சியில் நடித்தேன். அக்காட்சியில் நடித்துவிட்டு நான் நிஜமாகவே அழுதேன் என்று வேதனையுடன் கூறினார் ராஷ்மிகா மந்தனா.

பின்னர் ரன்பீரிடம் அறைந்ததை குறித்து இது சரியா? நான் நன்றாக நடித்திருக்கிறேனா? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா ?ஒன்றும் பிரச்சனை இல்லையே? என்று கேட்டேன்.

அந்த சமயத்தில் ஒரு நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நடிப்பின் உச்சத்தை உணர்ந்தேன் என ராஷ்மிகா மந்தனா நடிப்பின் ஆழத்தை புரிந்து கொண்டு மிகவும் எமோஷனலாக பேசினார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam