நாக சைதன்யாவுக்கு எனக்கும் சம்பந்தம் இல்ல.. குண்டை தூக்கி போட்ட நடிகை அமலா..!

தெலுங்கு திரை உலகில் நம்பர் ஒன் நடிகராக திகழும் நாகார்ஜுனா பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து இருக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இவரைப் போலவே வெள்ளை அழகியாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கனவுக்கன்னி நடிகை அமலாவை பல படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

பொதுவாகவே திரை படத்துறையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு முதல் திருமணம் சரியாக அமையாமல் இருப்பது இயல்பாகவே உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டிலான நட்சத்திர ஜோடிகளை பற்றி ஒரு லிஸ்ட்டே போட்டு சொல்லலாம்.

நாக சைதன்யாவை வளர்க்கவில்லை..

அந்த வரிசையில் தெலுங்கு ஸ்டார் ஆன நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா  அவருக்கு இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட்டு இன்று வரை நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

நாக சைதன்யாவை பொறுத்த வரை இவர் நாகார்ஜுனின் மகன் என்றாலும் அமலாவுக்கு பிறந்தவர் கிடையாது. ஏனெனில் நடிகர் நாகார்ஜுனா ராம் நாயுடுவின் மகள் லக்ஷ்மி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவர்கள் இருவரது மத்தியிலும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். மேலும் 1992 – ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட லக்ஷ்மியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலான விஷயம் பலருக்கும் தெரியாது. 

மேலும் நாக சைதன்யா அமலாவின் மகன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் லக்ஷ்மிக்கும் நாகார்ஜுனாவுக்கும் பிறந்த மகன்.

எனினும் நாகார்ஜுனா தன் முதல் மனைவியை பிரிந்ததை அடுத்து இரண்டாவது மனைவியான அமலா தான் அவரை வளர்த்து வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையை உளறிய அமலா..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் அமலா பேசும் போது நாக சைதன்யா தன்னோடு வளரவில்லை என்றும் அவர் சென்னையில் தனது தாயாருடன் தங்கி இருந்திருக்கிறார். அவ்வப்போது ஹைதராபாத் வந்து செல்வார் என்ற உண்மையை உளறி இருக்கிறார்.

ஹைதராபாத்துக்கு வரக்கூடிய சமயத்தில் நாக சைதன்யா தன் தந்தையுடன் நேரத்தை செலவிடுவார். அத்தோடு அகிலுடன் இணைந்து விளையாடுவார். இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு உள்ளது.

நாக சைதன்யா எப்போது வருவார் என அகில் பல நாட்கள் காத்திருந்திருப்பதாக சொல்லி இருக்கிறார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அமலா சொன்னதில் உண்மை உள்ளதாக பலரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version