இயக்குனர் ஷங்கர் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாளியான சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன்.

இப்படத்தில் கமல்ஹாசன் அப்பா மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

இந்தியன் திரைப்படம்:

இவர்களுடன் நாசர்,கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தார்கள், திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முத்திரை பதித்தது.

அந்த சமயத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த பாஷா படத்தின் மாபெரும் வசூலையே முறியடித்து சாதனை படைத்ததாக அப்போது செய்திகள் வெளியாகியது.

சுதந்திரப் போராட்ட தியாகியாக. கமல் நடிக்க அவரது மகன் சந்துருவாக. மற்றொரு ரோலிலும் நடித்திருந்தார்.

இதுதிரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் நிறைவடைந்தது அடுத்து தற்போது இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் மீண்டும் ஹீரோவாக கமல்ஹாசன் நடிக்க இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். மற்றும் காஜல் அகர்வால் , ரகுல் பிரீத் சிங் , சித்தார்த் , பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கும் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸுக்காக பெறுவாரியான ரசிகர்கள் காத்திருக்கும் சமயத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் தான் எப்படி கமிட்டானேன் என்பது குறித்து அனுபவத்தை சுவாரசியத்தோடு கூறி இருக்கிறார்.

சங்கர் சாரை நான் முதல் முதலில் பார்த்தபோது இவரா இவ்வளவு பிரமாண்ட படங்களை இயக்கியவர் என பார்த்து நான் வியந்தேன்.

பொதுவாக சங்கர் சார் என்றாலே தன் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை மிகவும் திறமை வாய்ந்தவர்களாக காட்டுவார்கள்.

அதுதான் அவரது பிரம்மாண்டத்தின் அழகே என்று கூட சொல்லலாம். அப்படித்தான் என்னையும் மிகவும் திறமைசாலியாக இந்த படத்தில் காட்டி இருக்கிறார்.

பெருமை பொங்கிய பிரியா பவானி ஷங்கர்:

அவர் என்னிடம் முதன் முதலில் கதை கூறிவிட்டு இதுக்கு அப்புறம் நீங்க தான் யோசிச்சு சொல்லணும் படம் ஓகேவா கதை உங்களுக்கு ஓகேவா நடிக்க முடியுமா என்று என கூறினார் .

உடனே நான் என்ன இப்படி சொல்லிட்டீங்க பேப்பரை கொடுங்க ரெண்டு கையில சைன் போட்டு தள்ளிடுறேன் என்ற அளவுக்கு மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன்.

பின்னர் நான் அவரிடம், இதுக்கப்புறம் நீங்க ஆப்ஷனே பார்க்க கூடாது இந்த ரோலில் நான் தான் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டு வந்தேன் என இந்தியன் 2 திரைப்படத்தில் தான் நடித்திருப்பது குறித்து மிகவும் பெருமையோடு உற்சாகத்தோடு பேசி இருக்கிறார் .

இப்படம் வருகிற ஜூலை 12ம்தேதி உலகம் முழுக்க திரையரங்கங்களை ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version