லேடி சூப்பர் ஸ்டாரா..? அப்டி சொல்லாதிங்க.. அவமானமா இருக்கு.. மஞ்சு வாரியர் என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

மலையாள திரைகளுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறது என்று மஞ்சு வாரியர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் தற்போது நடித்து களைகட்டி வருகிறார்.

இவர் மலையாள திரைப்பட நடிகரான திலீபை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணுக்கு தாய் ஆன பிறகு மற்றொரு பெண்ணோடு தீலிப் தொடர்பில் உள்ளார் என்பதை அறிந்து கொண்டு அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று தனித்து வசித்து வருபவர்.

லேடி சூப்பர் ஸ்டார்..

இதனை அடுத்து மஞ்சு வாரியர் சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இவர் அஜித்தோடு இணைந்து தமிழ் திரைப்படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஏராளமாக கொண்டிருக்கக் கூடிய ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்கிறார். தமிழில் இவர் என்றி கொடுத்த படம் அசுரன் இந்த படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து தமிழக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மஞ்சு வாரியர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தொடர்பாக தனது கருத்துக்களை தெளிவாக கூறியிருப்பது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி சொல்லாதீங்க.. அவமானமாயிருக்கு..

அப்படி அவர் அந்த பேட்டியில் பேசும் போது லேடி சூப்பர் ஸ்டார் என்று தன்னை அழைப்பது சமூக வலைதளங்களில் தேவையில்லாத சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக இருக்கிறது என்பதை பதிவு செய்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற சில வரைமுறைகள் உள்ளது. எனவே உண்மையில் எனக்கு அந்த பட்டம் வேண்டாம். ரசிகர்களின் அன்பே போதும் என்று படுக்கூலாக இவர் பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகின்ற நிலையில் இந்தப் பட்டத்தினை வேண்டாம் என்று மஞ்சுவாரியர் சொன்னது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.

ஏற்கனவே நயந்தாராவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வரக்கூடிய நிலையில் மஞ்சு வாரியர் நயனின் நெருங்கிய தோழி என்பதால் கூட இந்த பட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

என்ன இப்படி சொல்லிட்டாங்க..

மலையாள படத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் மஞ்சு வாரியார் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக நடிப்பதாக சொல்லியதை அடுத்து அடுத்த படம் ஞானவேல் சாரின் படம் என்பதால் அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய ஓகே என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது இவர் இந்த பட்டத்தை வேண்டாம் என்று சொல்லி இருப்பதில் இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு எந்த விதமான விமர்சனங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இந்த பட்டத்தை அவர் வேண்டாம் என்று சொல்லி இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version