இதை போட்டதால தான் குண்டானேன்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை நளினி..!

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக செயற்கை முறையில் தனது உடலை அழகாக மாற்றிக் கொள்ள நடிகைகள் தங்கள் இஷ்டத்துக்கும் எல்லாவற்றையும் மாற்றியமைத்துக்கொள்கிறர்கள்.

நடிகைளும் – பிளாஸ்டிக் சர்ஜரியும்:

முகம் அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது, மூக்கு நீளமாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் ஸ்லிம்மாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி என அழகாக தெரிய இப்படி பல்வேறு விதங்களில் நடிகைகள் தங்களை செயற்கை முறையில் அழகு படுத்திக் கொள்கிறார்கள்.

இது இப்போது இருக்கிற காலகட்டத்தில் தான் நடைமுறைக்கு வந்தது என நாம் நினைத்தோமானால் அதுதான் தவறு.

ஸ்டிராய்ட் ஊசி போட்டு குண்டான நளினி:

அந்த காலத்திலேயே பிரபலமான நடிகையாக இருந்த நடிகை நளினி தனக்கு குண்டாக இருப்பது பிடிக்கும் என விரும்பி உடலை செயற்கை முறையில் பருமனாகி கொண்டேன் எனக்கூறி இருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நளினி எனக்கு சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும் அதையும் தாண்டி குண்டாக இருப்பதற்கு,

எனக்கு மிக மிக பிடிக்கும் நான் குண்டாக வேண்டும் என்று கூறி என்னுடைய விருப்பத்தின் பேரில் ஸ்டிராய்ட் ஊசிகளை போட்டு தான் குண்டானேன்.

அந்த ஊசிகளை போட்டதால் தான் நான் குண்டாக இருக்கிறேன் என முதன்முறையாக தன்னுடைய உடல் குறித்து ரகசியத்தை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நளினி.

இதனுடன் தன்னுடைய முன்னாள் கணவர் நடிகர் ராமராஜன் உடனான பல்வேறு காதல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை நளினி.

80 காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நளினி தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மோகன் லால், மம்முட்டி, விஜயகாந்த் ,சத்யராஜ், மோகன் மற்றும் ராமராஜன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

காதல் கணவர் உடன் விவாகரத்து:

இவர் 1987 ஆம் ஆண்டு பிரபல நடிகரான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால். சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2000-ம் ஆண்டு மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். கணவரை பிரிந்து 25 ஆண்டுகள் கிட்டத்தட்ட ஆகியும் இன்னும் கணவர் மீதுள்ள அன்பு கூறியவே இல்லை.

அதனை பல பேட்டிகளில் நளினி கூறி வருவது தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் தனித்தனியே பிரிந்து வாழ்ந்தாலும்,

தங்களது மகளின் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று வருகிறார்கள்.

மிகச் சிறந்த ஜோடியாக ரசிகர்களால் இன்றும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்களே தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த காதல் ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள் நளினி – ராமராஜன் ஜோடி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version