நான் செஞ்ச முட்டாள் தனம்.. சிறு விஷயம் தான்.. ஆனா விலை பெருசு.. ஸ்ரீகாந்த் வேதனை..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நட்சத்திர ஹீரோவாக கிட்டத்தட்ட விஜய் ரேஞ்சிற்கு பெரும் புகழ்பெற்று தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ரீகாந்த்.

இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டிருந்தார் .

நடிகர் ஸ்ரீகாந்த்:

இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே திடீரென அவர் நறுக்கி சினிமாவில் ஆள் அட்ரசே இல்லாமல் போய்விட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் நடிகர் ஸ்ரீகாந்த்.

தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட் , வர்ணஜாலம், கனா கண்டேன் ,ஒரு நாள் ஒரு கனவு , பம்பரக் கண்ணாலே, துரோகி , சதுரங்கம் , நண்பன் , பாகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமானார்.

20ஸ் காலத்தின் நட்சத்திர ஹீரோ:

2000 கால கட்டத்தில் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்ததால் ஸ்ரீகாந்த்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே அப்போது இருந்தனர்.

குறிப்பாக சினேகா மற்றும் ஸ்ரீகாந்த் இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நடித்தால் அவர்களின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

அப்படித்தான் ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். மேலும் திரைத்துறையில் காதல் கிசுகிக்கப்பட்ட ஜோடியாகவும் இவர்கள் பார்க்கப்பட்டு வந்தனர்.

இதனிடையே பிரமாண்ட இயக்குனர் ஆன ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

நான் செய்த தவறுகள்:

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் தான் செய்த தவறுகளை பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

அந்த பேட்டியில் நான் ரோஜா கூட்டம் படத்தில் நடித்த போது அந்த படத்திற்காக எனக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள் .

என்னுடைய மார்க்கெட் எதிர்பார்க்காத அளவுக்கு உச்சத்தை தொட்டது. ஆனால், அதை நானே கெடுத்துக் கொண்டேன்.

ஆம் அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் நடிக்க வெறும் ரூ . 25 லட்சம் தான் சம்பளமாக கொடுத்தார்கள் .

சிம்புவால் ரூ. 4 லட்சம் இழந்தேன்:

அதற்கு காரணமும் நானே தான். அதாவது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை அதனால் சிம்புவை வைத்து “சைட் அடிப்போம் தம் அடிப்போம்” பாடலை உருவாக்க நான் போராடி அதை கஷ்டப்பட்டு செய்தேன்.

அதற்கு தயாரிப்பாளர் இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்னால் ஈடு செய்ய முடியாது என கூறி என்னுடைய சம்பளத்திலிருந்து ரூ. 4லட்சம் எடுத்துக் கொண்டார்கள் .

இப்படித்தான் எனக்கு சம்பளம் குறைந்தது. அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட 6 மாதம் சூட்டிங் எடுக்க திட்டமிட்டு இருந்தார் சங்கர் சார் .

ஆனால் என்னால் அந்த படத்தின் சூட்டிங் 8மாதம் ஆகிவிட்டது. அதாவது, கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவது தெரியாமல் உதவி இயக்குனரோட பேச்சைக் கேட்டு காலேஜ் போஷன் அப்படின்னு நினைச்சுட்டு நான் மீசை தாடி எல்லாம் சேவ் பண்ணிட்டு போய்ட்டேன்.

இயக்குனர் ஷங்கர் மோசமா திட்டினார்:

அதை பார்த்துட்டு டைரக்டர் ஷங்கர் சார் ரொம்ப ஷாக் ஆகிட்டாரு. நீங்க இவ்ளோ பெரிய ஹீரோவா இருந்தும் பொறுப்பு இல்லாம இப்படி வந்து நிக்கிறீங்களே என்று என்னை திட்டினாரு.

ஷேவ் பண்ணனும் அப்படின்னா இங்கே வந்திருக்கலாமே என்று என்னை திட்டியது மட்டும் இல்லாமல்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எனக்காக காத்திருந்து என்னுடைய தாடி வளர்ந்த பிறகு அந்த கிளைமாக்ஸ் காட்சி எடுத்து முடித்தார்கள்.

இப்படித்தான் நான் சினிமாவில் சிறு சிறு தவறுகள் செய்து என்னுடைய மார்க்கெட்டை இழந்து கொண்டேன் என ஸ்ரீகாந்த் வருத்தத்தோடு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam