பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை…. 2 மணி நேரம் அவமானப்பட்டேன்…. மணிமேகலை வேதனை!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியான விஜே மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வரும் மணிமேகலை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

VJ மணிமேகலை:

மூலை முடுக்கு எல்லாம் இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்றடைந்தது. அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தார்.

கலகலப்பான பேச்சும், எதார்த்தமான இவரது பழகும் குணம் தான்கோடிக்கணக்கான ரசிகர்களிடையே சென்றடைந்தது என்று சொல்லலாம்.

எந்த ஒரு பந்தமும் காட்டாமல் எளிய மக்களிடம் கூட மிகவும் சாதாரணமாக பழகும் குணம் கொண்டவர் விஜே மணிமேகலை.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளியாக இருந்து வந்த மணிமேகலை இதனிடையே வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் முடங்கிவிட்டார்.

அந்த சமயத்தில் தான் கொரோனா காலகட்டத்தில் தனது கணவர் உசைன் உடன் கிராமம் ஒன்றுக்கு சென்று அங்குள்ள நண்பர்களுடன் வீடியோ வெளியிட்டது மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார் .

பெற்றோரை எதிர்த்து திருமணம்:

முன்னதாக விஜே மணிமேகலை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தபோது உசைன் என்ற நடன கலைஞரை தனது பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே தான் விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்புகள் மணிமேகலைக்கு கிடைக்கத்துவங்கியது.

அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

அவரது எதார்த்தமான குணமும் நடை உடை பாவனைகளையும் வெகுவாக மக்களை கவர்ந்தது என்றே சொல்லலாம்.

இதனிடையே மணிமேகலை தனது கணவர் ஓசையுடன் சேர்ந்து தனியாக சொந்தமாக YouTube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.

அதன் மூலம் அவருக்கு கணிசமான வருமானமும் கிடைத்து வருகிறது. இதனுடையே கொரோனா காலகட்டத்தில் தான் தங்கிய கிராமம் ஒன்றில் பெரிய லேண்ட் வாங்கி அதில் தற்போது வீடு கட்டி இருக்கிறார் .

பாஸ்போர்ட் ஆபீசில் நடந்த கொடுமை….

அவ்வப்போது அந்த வீட்டின் புகைப்படங்கள் வீடியோக்களை மணிமேகலை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜே மணிமேகலை தனது கணவருடன் சேர்ந்து சென்னையில் உள்ள பாஸ்போர்ட் ஆபீஸிற்கு சென்றிருக்கிறார் .

அப்போது அவசர அவசரமாக சென்றதில் இரண்டு கால்களில் வெவ்வேறு செருப்புகளை அணிந்து சென்றுவிட்டார்.

இதை அவர் கவனிக்காமல் அந்த ஆபீஸிற்கு சென்று தான் பார்த்திருக்கிறார். உடனே அதை வீடியோவாக எடுத்து பாஸ்போர்ட் ஆபீஸில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நான் பட்ட அவமானம் இருக்கே அப்பப்பப்பா…. என புலம்புகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version