சிம்புவுக்கு கல்யாணம் ஆகும் போது தான் எனக்கும் கல்யாணம்.. பிரபல சீரியல் நடிகை..!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

டி ஆர் ராஜேந்திரன் பெற்றெடுத்த சிங்கக்குட்டி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்து இடையில் சறுக்கல்களை தந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனத்திற்கு ஏற்ப தற்போது செகண்ட் ரவுண்டில் களை கட்டி வருகிறார்.

நடிகர் சிம்பு..

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படத்தினை அடுத்து நடிகர் சிம்பு தற்போது உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலங்களில் இவர் நடித்த வரும் போது இவரை பற்றி கிசுகிசுக்கள் அதிகளவு வெளி வந்தது. குறிப்பாக இவர் நயன்தாரா, திரிஷா, ஆண்ட்ரியா போன்ற பட நடிகைகளோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

எனினும் அந்த கிசு கிசுக்கள் வெறும் கிசுகிசுக்கள் ஆகவே மாறி உள்ள நிலையில் தற்போது 41 வயதை கடந்திருக்கும் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

சிம்புவிற்கு கல்யாணம் ஆகும் போது தான்..

இதனை அடுத்து அண்மையில் கூட இவரை போல முரட்டு சிங்கிளாக சுற்றி திரிந்து வந்த பிரேம்ஜி இந்து என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சிம்புவிற்கு எப்போது கல்யாணம் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இணையம் முழுவதும் இவரது அப்பாவும், அம்மாவும் சிம்புவுக்காக பெண் பார்க்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் திருமணம் ஆகும் என்பது போன்ற விஷயங்கள் ஊடகங்களில் அதிக அளவு கசிந்து வருகிறது.

இது வரை சிம்புவின் கல்யாணம் பற்றியோ சிம்பு கல்யாணம் செய்யக்கூடிய பெண் பற்றியோ எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளி வராத நிலையில் சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகு தான் எனக்கு திருமணம் என்று நடிகை ஒருவர் சொன்ன கருத்து வைரலாகி உள்ளது.

எனக்கும் கல்யாணம் பிரபல நடிகை பேச்சு..

இந்த நடிகை யார் என்று நீங்கள் உங்கள் மண்டையைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். இவர் கல்யாணம் முதல் காதல் வரை, சின்ன தம்பி, நாச்சியார் புரம் போன்ற சீரியலில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகை ரேமா அசோக்.

இவர் அன்னையில் ஒரு வீடியோவை இணையங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் தான் சிம்புவுக்கு திருமணமாகும் போது தான் எனக்கு திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த விஷயம் தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நானும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய ரேமா அசோக்கின் பேசினை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு இப்படி எல்லாம் இருப்பார்களா? என்று எண்ண வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version