அம்மாவுக்கு பிடிக்காத இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன்.. ஜான்வி கபூர் ஓப்பன் டாக்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவில் தற்போது இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தந்தை மிகப்பெரிய தயாரிப்பாளர் தாய் நட்சத்திர நடிகை, லேடிஸ் சூப்பர் ஸ்டார் எப்படி அந்தஸ்திலிருந்து இருந்து வந்ததால் ஜான்வி கபூருக்கு திரைப்பட வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது.

ஜான்வி கபூர்:

வாரிசு நடிகை என்பதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க சுலபமாக சினிமாவில் நுழைந்து தற்போது இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

முதன்முதலில் தடக் திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ஜான்விக்கு தொடர்ந்து அடுத்தடுத்த ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இதனை தன்னுடைய அம்மாவின் ஆசைப்படி தென் இந்திய சினிமா மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ஜான்விகபூர் தற்போது இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் அறிமுகம்:

இந்த திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் அளவில் வைரல் ஆகியது. ஜூனியர் என்டிஆர் உடன் படு மோசமான கிளாமர் உடைகளில் ரொமான்ஸில் புகுந்து விளையாடியிருந்தார் ஜான்வி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூர் இப்படத்தை குறித்தும் தனது தனிப்பட்ட சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது நீங்கள் சினிமாவில் ஏற்று நடக்கும் கதாபாத்திரத்திற்காக இந்த ஒரு விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றால் அது எது? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு….

ஜான்விகபூர் தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயத்தை நான் எப்போதுமே செய்ய மாட்டேன்.

இதுவரை நான் நடித்த ரோல்களுக்காக அதிகம் மெனக்கெட்டதன் பலனாக என்னுடைய தோள்பட்டை எலும்பு இறங்கி விட்டது.

லும்பு உடைந்து விட்டது… கை கால்களில் அடிபட்டு ஏற்பட்ட ரத்தம் கொட்டியது. அவ்வளவு கஷ்டப்பட்டு நான் உழைத்து படங்களில் நடித்திருக்கிறேன்.

அம்மாவுக்கு பிடிக்காத அதை செய்யமாட்டேன்:

அப்படி இருந்தும் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என்றால் அது மொட்டை அடிப்பதை மட்டும் நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு போதும் செய்ய மாட்டேன்.

அப்படி ஒரு ரோலுக்காக எனக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கிறார்கள் என்றாலும் நான் மொட்டை மட்டும் அடிக்கவே மாட்டேன் .

ஏனென்றால் என்னுடைய தலைமுடியில் என்னுடைய அம்மா அதிக கவனத்தை வைத்திருந்தார். என்னுடைய தலை முடி வளர்ச்சியில் அவர் அதிக அக்கறையும் எடுத்துக் கொள்வார் .

நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார் என்னுடைய அம்மா. ஒரு முறை நான் என்னுடைய முதல் படத்திற்காக சிறிதளவு முடியை வெட்டி விட்டு சென்றேன்.

அப்போது அவர் கடும் கோபத்துடன் என்னை திட்டினார். எனவே எந்த ஒரு சூழலிலும் முடியை வெட்டக்கூடாது என்று அவர் கூறியதால் என் தலை மீது மட்டும் நான் கையை வைக்க மாட்டேன் கூறியிருந்தார் ஜான்வி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version