ஓவர் தெனாவெட்டு.. விஜய்யை இனி சந்திக்கவே மாட்டேன்.. ராதாரவி சொல்லும் பகீர் காரணம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான எம்.ஆர். ராதா திரைப்படத்தை தாண்டி அரசியலிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகர் ராதாரவி:

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பொதுவெளியில் மேடைகளில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுபவர் நடிகர் ராதாரவி.

இதனால் இவர் பெரும் சர்ச்சைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை கூறி ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது கோட் என்னும் திரைப்படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார் .

அவர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தை முடித்துவிட்டு விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவிட்டு அதுவே தனது கடைசி திரைப்படமாக அறிவிக்கவும் இருக்கிறார்.

அதை எடுத்து அரசியல் மும்முரமாக முழு வீச்சில் ஈடுபடவும் இருக்கிறார். இப்படியான சமயத்தில் நடிகர் விஜய் குறித்து ராதாரவி பெரும் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றை கூறி பூதாகரத்தை கிளப்பி இருக்கிறார்.

விஜய்க்கு வில்லனான ராதாரவி:

நடிகர் ராதாரவி விஜய் உடன் சேர்ந்து சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் ராதாரவி.

அப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் ஒன்றை மேடையில் ஒன்றில் கூறிய நடிகர் ராதாரவி நான் விஜய் உடன் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

அப்போது விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய பேரன் அவர் மீது ரொம்ப வெறியனா இருந்தான். அவன் குழந்தையா இருக்கும்போது விஜய்யோடு சேர்ந்து போட்டோ ஒன்று எடுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டன.

அது நிறைவேறாமலே இருந்தது. இப்ப அவனுக்கு 11 வயசாகிடுச்சு… அந்த சமயத்தில் நான் விஜய் கூட சர்க்கார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

பேரனின் ஆசை:

நான் தான் விஜய் கூட இப்ப நடிக்கிறேன்ல இந்த சமயத்துல போய் கேட்டா எடுத்துக்கலாம் அப்படின்னு நினைச்சு என் பேரனை சர்க்கார் படத்தோட ஷூட்டிங்கிற்கு அழைத்துச்சென்றேன்.

கூடவே என் குடும்பமும் வந்திருந்தார்கள். விஜய்யை சந்தித்து என்னுடைய பேரனும் குடும்பமும் உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படறாங்க அப்படின்னு விஜய் கிட்ட சொன்னேன்.

உடனே அதற்கு விஜய்யும் எங்களை வர சொல்லி இருந்தாரு. ஆனால், அவரோட பிஏ எங்களை உள்ள விடவே இல்லை. சார் மேக்கப் போட்டுட்டு இருக்காரு அதனால இப்ப போட்டோ எடுக்க முடியாது.

கொஞ்ச நேரம் ஆகும் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொன்னாரு. உடனே என்னுடைய குடும்பத்தார் ரொம்ப நேரம் காத்திருந்தாங்க .

ஆனால், மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு விஜய் சார் வந்தாரு. அவர் கூட என் குடும்ப எல்லாரும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க.

அதன் பிறகு சர்க்கார் படத்தோட பாடல் இசை வெளியீட்டு விழாவில் நான் லோ பிரஷர்ல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.

அந்த டைம்ல விஜய் சார் தான் என்னை தாங்கி பிடித்து எனக்கு உதவி செய்தார். விஜய் செய்த உதவிக்காக நான் அவருக்கு நன்றி சொல்லணும் அப்படின்னு சொல்லி அவர் நேரில் மீட் பண்ணனும் என அவரோட பிஏ-வுக்கு போன் பண்ணி கேட்டேன் .

அசிங்கப்படுத்தினாரா விஜய்?

அதற்கு அவர் சொன்ன விஷயம் தான் எனக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கிடுச்சு. அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா…. நீங்க விஜய் சாரை பார்க்க தாராளமா வரலாம்.

ஆனால், முன்பு கூட்டிட்டு வந்த மாதிரி உங்களுடைய குடும்பத்தையே கூட்டிட்டு வந்துடாதீங்க அப்படின்னு சொன்னாரு.

உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. சரி நான் வரவில்லை என போனை கட் பண்ணி விட்டேன். அதன் பிறகு விஜய்யை நான் சந்திக்கவே இல்லை என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசியிருக்கிறார்.

ராதாரவியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக விஜய்யின் ரசிகர்கள் சரி அப்படி அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? சரியா தானே சொல்லியிருக்காரு என ராதாரவியை விமர்சித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version