“இட்லி மாவு இருக்க..!” – அப்ப இது போல ஈசியா இட்லி போண்டா செஞ்சு அசந்துங்க..!!

மாலை நேரத்தில் அனைவரும் குறுந்தீனியை பெரும்பாலும் எதிர்பார்த்து வருகிறார்கள். சனி ஞாயிறு அன்று விடுமுறையாக இருக்கும்போது உங்கள் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் இதுபோல போண்டாவை செய்து அசத்தலாம்.

இந்த இட்லி மாவு போண்டாவை எளிதில் செய்து அசத்துவதோடு எண்ணெய் குடிக்காமல் குறுகிய நேரத்தில் இதை எளிதில் உருவாக்க முடியும். அப்படி இந்த போண்டாவை உருவாக்க என்னென்ன தேவை எப்படி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இட்லி போண்டா செய்ய தேவையான பொருட்கள்

1.இட்லி மாவு இரண்டு கப்

2.பொடியாக நறுக்கிய வெங்காயம்

3.நறுக்கிய பச்சை மிளகாய் 4

4.கருவேப்பிலை சிறிதளவு 5.பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

6.சுவைக்கு ஏற்ற உப்பு

7.காரத்துக்கு தேவையான மிளகாய் தூள்

8.இரண்டு டீஸ்பூன் மைதா மாவு

9.சோடா உப்பு

 செய்முறை

முதலில் ஒரு பௌலில் இரண்டு கப் அளவு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு பொடி பொடியாய் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

 பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மைதா மாவை அதில் கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து இதில் சிறிதளவு சோடா உப்பு போடவும் .

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி  சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடான பிறகு  இந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட வேண்டும்.

 ஆரம்ப நிலையில் அப்படியே போட்ட உருண்டைகளை நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். இரண்டு நிமிடங்கள் கழித்த பிறகு திருப்பிப் போட்டு நன்கு வேக விடவும்.

பொன் நிறமாக வரும் வரை காத்திருக்கவும் இப்போது கிரிஸ்பியான இட்லி மாவு போண்டா ரெடி மேல்பகுதி மிகவும் கிரிஸ்பியாகவும் உள்பகுதி பஞ்சு போல இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

 நீங்களும் மாலை நேர ரெசிபியான இந்த இட்லி போண்டாவை உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …