வடிவேலுவுடன் நடிச்சா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி நடிகர் ஆன வடிவேலு “வைகைப்புயல்” என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

மதுரையை சேர்ந்த அவர் முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகமானது பிரபல நடிகர் ஆன ராஜ் கிரணின் சிபாரிசின் பெயரில் தான்.

வைகைப்புயல் வடிவேலு:

முதன்முதலில் ராஜ்கிரன் சிபாரிசு செய்து 1988ல் வெளிவந்த டி ராஜேந்தர் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .

அதை அடுத்து அவரது திறமையும் அவரது அசாத்திய நகைச்சுவை நடிப்பும் பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள்.

தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் , அஜித், விஜய்ம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்த காமெடியில் அசத்தி இருப்பார்.

வடிவேலு இல்லாத திரைப்படங்களே என சொல்லும் அளவிற்கு கட்டாயம் அவர் படத்தில் இடம் பெற்று விடுவார்.

அது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த காமெடி நடிகராக பெரும் புகழ் பெற்ற அதே சமயத்தில் பெரும் சர்ச்சைகளில் வடிவேலு சிக்கி இருந்தார்.

தொடர் சர்ச்சைகளில் வடிவேலு:

கமிட் ஆகும் படங்களின் ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை. பணத்தை வாங்கிவிட்டு இழுத்தடிப்பது, பணத்தை வாங்கிட்டு வாங்கவே இல்லை என்னை கூறுவது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.

அத்துடன் சக நடிகர்களை அவமரியாதையாக நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை பல விஷயங்களை செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி வந்தார்.

இது குறித்து பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இது குறித்து வடிவேலு மறுப்போ, எதிர்ப்போ தெரிவித்தது கிடையாது.

சில ஆண்டுகளாக வடிவேலு சரியாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. பணம் வாங்கிவிட்டு ஒப்பந்தம் செய்துவிட்ட படங்களில் அவர் நடிக்காமல் இழுத்தடிக்கிறார் என கூறி அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

பின்னர் பல வருடங்கள் கழித்து உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

மாமன்னனாக வடிவேலு:

இந்த கதாபாத்திரம் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி மிக சிறந்த குணசித்திர நடிகராக எமோஷ்னல் மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தார் .

வடிவேலு தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் தற்போது கமிட்டாகி நடித்த வருகிறார். குறிப்பாக கௌரவமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், பிரபல காமெடி நடிகை பிரியங்கா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேல் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் .

அதில் பேசிய அவர் வடிவேலு குறித்து என்னென்னமோ தகவல்கள் நிறைய பேர் கூறுகிறார்கள் . ஆனால் அதைப்பற்றி எனக்கு எந்த ஒரு அறிவும் இல்லை.

வடிவேலுவுடன் நடித்தால் அத கட்டாயம் பண்ணனும்:

என்னை பொருத்தவரை வடிவேலுவுடன் நடிப்பது எனக்கு சுலபமாக தான் இருந்தது. ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் பொழுது சிரிப்பை அடக்கி கொண்டு நடிக்க வேண்டும்.

இதுதான் மிகப்பெரிய சவாலாக எனக்கு இருக்கும. பல காட்சிகளில் சிரித்து விடுவேன். இதனாலேயே குறிப்பிட்ட காட்சியை மீண்டும் மீண்டும் படமாக்குவார்கள்.

அதிக முறை டேக் எடுப்பார்கள். சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியாது. ஆனாலும் வடிவேலுவுடன் நடித்தாலே சிரிப்பை கண்ட்ரோல் பண்ணித்தான் ஆக வேண்டும் என்று பேசி இருக்கிறார் பிரியங்கா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version