அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் இதை பண்ணுவேன்.. போட்டு உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!

திரைத்துறை பின்புலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து மீடியா உலகில் தனது திறமையின் மூலமாக நுழைந்து அதன் பின்னர் ஹீரோயினாக பிரபலமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளினியாக உலகில் நுழைந்தவர் பின்னர் சின்னத்திரை சீரியல் நடிகையாக மிகப்பெரிய அளவில் இல்லத்தரசிகள் இதே புகழ்பெற்றார்.

பிரியா பவானி ஷங்கர்:

குறிப்பாக அவரது நடிப்பில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக டீனேஜ் வயசு பெண்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய புகழும் அடையாளத்தையும் கொடுத்தது ஒரு சில டிவி சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலிருந்து வெற்றியை பதித்து தன்னுடைய அடையாளத்தை மக்களுக்கு வெளி காட்டினார்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ,களத்தில் சந்திப்போம் ,யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் பத்து தல , ருத்ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பொதுவாகவே அவர் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொண்டவராகவும் இருந்து வந்ததால் அவருக்கு அடுத்த அடுத்த வெற்றி படங்கள் தானாகவே அமைய ஆரம்பித்தது.

இதனால் அவரது மார்க்கெட்டும் மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்டு நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி:

தற்போது அவர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த வருகிறார். 33 வயதாகும் நடிகை பிரியா பவானிசங்கர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆனால் தனது காதலரான ராஜவேல் என்பவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். அதற்காக அவர்கள் இருவரும் சேர்ந்து அண்மையில் கடற்கரை ஓரம் மிகப்பெரிய பங்களா வீடு ஒன்றை வாங்கி குடி பெயர்ந்தனர்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், சிம்புவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல .

இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் பிரியா பவானிசங்கர் பல்வேறு பிரமோஷன் பேட்டிகளில் கலந்து கொண்டார்.

அப்போது ஆங்கர் ஒருவர் சினிமாவில் நடிகைகளுக்கும் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பிரியா பவானி சங்கரிடம் கேட்டதற்கு, நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது இருந்தே தற்போது வரை யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு வரவே இல்லை.

அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை எனக்கு…

மேலும், தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யவும் இல்லை. எனக்கு பல்வேறு நண்பர்கள் வட்டாரம். ஆண்கள் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள் .

ஆனாலும் அது போன்ற ஒரு அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை. ஆனால் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது.

அது இல்லை என்று நான் சொல்லவில்லை பல பெண்கள் அதை அனுபவித்து தான் இருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் இல்லை என்பதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரியா பவானி ஷங்கர் அந்த பேட்டியில் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version